செய்திகள் :

வெண்ணிற உடையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ; 9 பேருக்கு மட்டுமே குண்டம் இறங்க அனுமதி- ஏன் தெரியுமா?

post image

ஹெத்தையம்மனுக்கு விழா

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக வாழ்ந்து வரும் படுகர் சமுதாய மக்கள் ஹெத்தையம்மன் எனும் மூதாதையரை குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மனுக்கு விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். பல கிராமங்களிலும் தற்போது ஹெத்தையம்மன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹெத்தையம்மனின் விருப்பத்திற்குரிய உடையாக கருதப்படும் தூய வெண்ணிற உடை தரித்து வழிபட்டு வருகின்றனர்.

ஹெத்தையம்மன் திருவிழா

ஊட்டி அருகில் உள்ள காரக்கொரை கிராமத்தில் தற்போது ஹெத்தையம்மன் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற குண்டம் இறங்கும் விழாவில் ஹெத்தைக்காரர்கள் எனப்படும் 9 பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கி பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினர். இசை, நடனம் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.

ஹெத்தைக்காரர்கள் குறித்து தெரிவித்த படுகர் சமுதாய மக்கள், " சிறப்பு வாய்ந்த கோத்தகிரியின் பேரகணி, ஜெகதளா,கேத்தி உள்ளிட்ட 14 கிராமங்களில் ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஜெகதளா சுற்றுவட்டாரத்தில் உள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த 9 பேர் 48 நாட்களாக விரதம் இருப்பார்கள்.

ஹெத்தையம்மன் திருவிழா

கையில் செங்கோல் ஏந்தியும் புனித குடைகளை பிடித்தவாறும் பல கிராமங்களுக்கு நடந்தே சென்று அருள்வாக்கு கூறுவார்கள். குண்டம் இறங்கும் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினாலும் ஹெத்தைக்காரர்கள் எனப்படும் 9 பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்படுவது வழக்கம். குண்டம் இறங்கிய பூசாரிகளிடம் மக்கள் அருள்வாக்கு பெற்றுக் கொள்வார்கள் " என்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மின்னலாய் பாய்ந்த காளைகள், அடக்கி வென்ற வீரர்கள் | Photo Album

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூ... மேலும் பார்க்க

ஊட்டி: ராஜ வேடம், பாரம்பர்ய இசையில் நடனம்; களைகட்டிய கோத்தர் பழங்குடிகளின் திருவிழா!

நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி இனத்தைச் சேர்ந்த கோத்தர் இன‌ மக்கள் மட்பாண்ட கலையில் கைதேர்ந்த கலைஞர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். இரும்பு பட்டறை நுட்பங்களையும் பல ஆண்டுகளாகப் பயன்... மேலும் பார்க்க

பொங்கல் விழா : ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு - களைகட்டிய கொண்டாட்டம்

பொங்கல் விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு பொங்கல் விழாவை முன்னிட்டு விழுப்புரம் ... மேலும் பார்க்க

நீலகிரி: "யானைப் பொங்கல் பார்க்கலயோ மக்கா.." - தெப்பக்காடு யானைகள் முகாமில் கோலாகலம்! | Photo Album

வளர்ப்பு யானைகள் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்... மேலும் பார்க்க

"நாட்டு மாடுகள் இல்லை என்றால் இயற்கை விவசாயம் இல்லை" - ஐஐடி இயக்குநர் காமகோடி நெகிழ்ச்சி உரை

சென்னை மேற்கு மாம்பலத்தில், 'ஸ்ரீமகாபெரியவாளின் கர்ப்பக்ரஹம்' என்று போற்றப்படும் `மாம்பலம் கோ சம்ரக்ஷண சாலா' வின் 49 வது மாட்டுப்பொங்கல் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.ஆன்மிக அன்பர்கள் பலரும் கலந்துக... மேலும் பார்க்க

மஹரசங்கராந்தி: தஞ்சாவூர் பெரிய கோயில் நந்திக்கு 2டன் காய், கனி அலங்காரம்; 108 கோபூஜை |Photo Album

தஞ்சை பெரியகோவில் 108 கோபூஜைதஞ்சை பெரியகோவில் 108 கோபூஜைதஞ்சை பெரியகோவில் 108 கோபூஜைதஞ்சை பெரியகோவில் 108 கோபூஜைதஞ்சை பெரியகோவில் 108 கோபூஜைதஞ்சை பெரியகோவில் 108 கோபூஜைதஞ்சை பெரியகோவில் 108 கோபூஜைதஞ்ச... மேலும் பார்க்க