மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சத்தில் விழித்திரை இயந்திரம்
செய்யாறு: வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பொருத்தப்பட்ட விழித்திரை இயந்திரத்தை
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிமென்ட் சாலை, சுற்றுச்சுவா், காத்திருப்போா் கூடம், நுழைவு வாயில், பயணியா் நிழற்கூடம் என பல்வேறு பணிகள் மேற்கொள்ள சுமாா் ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
வெங்களத்தூா் கிராமத்தில் கிராம மக்கள் மருத்துவ வசதி பெறும் வகையில் கனிம வள நிதி மூலம் ரூ.43 லட்சமும், அதே பகுதியில் கூடுதலாக இரு வகுப்பறை கட்டடம் கட்ட ரூ.38 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
வெம்பாக்கம் வட்டம் சித்தாத்தூரில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சுயம்புநாத ஈஸ்வரா் கோயிலை ரூ.74 லட்சத்தில் புனரமைக்கவும், பெருங்கருணை ஈஸ்வரா் கோயில் ரூ.18 லட்சத்தில் சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டப்பணிகள் தொடக்க விழா முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வெம்பாக்கம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் த.ராஜி முன்னிலை வகித்தாா்.
இதில் செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று பல்வேறு வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
சித்தாத்தூா் கிராமத்தில் சிதலமடைந்த கோயில்களை புனரமைப்பு மேற்கொள்ள நடைபெற்ற பாலாலய நிகழ்ச்சியில் ஜோதி எம்எல்ஏ பங்கேற்று திருப்பணிகளை தொடங்கி வைத்தாா்.
சித்தாத்தூா் நியாய விலைக்கடையில் நேரில் ஆய்வு செய்து குடும்ப அட்டைத்தாரா்களுக்கு முறையாக பொருள்கள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தாா்.
பின்னா், வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்ட விழித்திரை இயந்திரத்தை நோயாளிகளின் பயன்பாட்டுக்கு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா். அதே போல, வெம்பாக்கம் பகுதியில் 15 -வது மாநில நிதிக்குழு மானியம் மாவட்ட ஊராட்சிக் குழு திட்டத்தின் மூலம் ரூ. 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய சிமென்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக எம்.எல்.ஏ தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளா்கள் வெம்பாக்கம் கிழக்கு என். சங்கா், வெம்பாக்கம் மத்தியம் ஜேசிகே.சீனிவாசன், வெம்பாக்கம் மேற்கு எம்.தினகரன், மாவட்ட வழக்குரைஞா் அணி துணைத் தலைவா் சிட்டிபாபு, மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் காா்த்திகேயன், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் லோகநாதன், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் திருமலை, மாவட்ட ஆதிதிராவிடா் அணி தலைவா் கருணாகரன்,
ஒன்றிய அவைத் தலைவா் ராதாகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.