நாக்கைப் பிளவுப்படுத்தி டிரெண்டிங் டாட்டூ - கைதுசெய்யப்பட்ட இருவர்; திருச்சி அதி...
வெற்றிப் பாதையில் நியூஸி.! இங்கிலாந்துக்கு 658 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 658 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது.
இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று முன்னிலையில் இருக்கிறது.
வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு பந்துவீசத் தடை விதித்த ஐசிசி!
இவ்விரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 347 ரன்களும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களும், நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 453 ரன்களும் எடுத்து ஆல்- அவுட் ஆனது.
நியூசிலாந்து அணித் தரப்பில் 2-வது இன்னிங்ஸில் அசத்தலாக விளையாடிய நியூசிலாந்து முன்னாள் கேப்டன் வில்லியம்சன் 156 ரன்கள் விளாசி அசத்தினார். வில் யங், டேரில் மிட்செல் தலா 60 ரன்கள் எடுத்தனர். இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
3-வது நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 18 ரன்கள் எடுத்துள்ளது. ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட் இருவரும் களத்தில் உள்ளனர்.
4-வது நாள் ஆட்டம் நாளை(டிச.17) நடைபெறுகிறது. நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 8 விக்கெட்டுகளும், இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 640 ரன்களும் தேவையாக உள்ளன.
இதுவரை எந்த அணியும் 420 ரன்களும் மேலான இலக்கை விரட்டிப்பிடித்தது கிடையாது. மேற்கிந்திய தீவுகள் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 418 ரன்கள் சேஸ் செய்ததே சாதனையாக தொடர்வது குறிப்பிடத்தக்கது.