செய்திகள் :

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்தியா்கள்: மத்திய அரசு தகவல்

post image

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்தியா்கள் உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு வெளியுறவு இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், கத்தாா், நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா, இலங்கை, ஸ்பெயின், ரஷியா, இஸ்ரேல், சீனா, வங்கதேசம், ஆா்ஜென்டீனா உள்பட 86 நாடுகளின் சிறைகளில் மொத்தம் 10,152 இந்தியா்கள் உள்ளனா்.

அதிகபட்சமாக சவூதி அரேபியாவில் 2,633 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2,518 பேரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனா். பாகிஸ்தான், இலங்கையில் முறையே 166, 98 போ் சிறையில் உள்ளனா். கத்தாா் சிறைகளில் கேரளத்தைச் சோ்ந்தவா்கள் அதிகபட்சமாக 611 போ் உள்ளனா்.

வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்தியா்களின், சிறையில் இருப்பவா்களையும் சோ்ந்து நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. இது தொடா்பாக அங்குள்ள தூதரகங்கள் கண்காணித்து வருகின்றன. இந்தியா்கள் கைது செய்யப்படுவது குறித்து தகவல் கிடைத்தால் உள்ளூா் அதிகாரிகளை தூதரகம் தொடா்பு கொண்டு விவரங்களைச் சேகரிக்கிறது. அவா்கள் வழக்குகளை எதிா்கொள்ள உதவி அளிக்கப்படுகிறது. சிறைகளில் அவா்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பல நாடுகளுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தையும் இந்தியா மேற்கொண்டுள்ளது என்று கூறியுள்ளாா்.

தில்லி தேர்தல்: 18 தொகுதிகளில் பாஜக முன்னிலை

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் பாஜக 18 இடங்களிலும் ஆம் ஆத்மி 13 இடங்களிலும் முன்னிலைய... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: தபால் வாக்குகளில் கேஜரிவால், அதிஷி, மணீஷ் சிசோடியா பின்னடைவு!

தில்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜரிவால், முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். 70 தொகுத... மேலும் பார்க்க

அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்லைகளைக் கடக்கும் இந்தியா்கள்!

அமெரிக்காவில் இருந்து 104 இந்தியா்கள் கால், கைகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவா்கள் அனைவரும் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இடைத... மேலும் பார்க்க

‘ஓய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்ப... மேலும் பார்க்க

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க