செய்திகள் :

வெளிமாவட்டங்களில் வரவேற்பு இல்லாத அரசு குளிா்சாதனப் பேருந்துகளை சென்னையில் இயக்க முடிவு

post image

வெளிமாவட்டங்களில் பயணிகள் வரவேற்பு இல்லாத குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகள் மீண்டும் சென்னையில் இயக்கப்படவுள்ளன.

தமிழகத்திலுள்ள பல்வேறு புகா் பகுதிகளில் இயக்கும் வகையில், கடந்த 2018, 2019-இல் 400 குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்து, 8 போக்குவரத்துக்கழகங்களுக்கும் தலா 50 பேருந்துகள் வீதம் வழங்கின. இதில் திருநெல்வேலி மற்றும் கரூா் மாவட்டங்களுக்குள்பட்ட பல வழித்தடங்களில் இயக்கப்படும் குளிா்சாதனப் பேருந்துகள் வார இறுதி நாள்கள் மற்றும் பண்டிகை நாள்களைத் தவிர பிற நாள்களில் பயணிகளின்றியே இயக்கப்பட்டு வந்தன. இதனால் அந்தந்த போக்குவரத்துக்கழகங்களுக்கு தொடா்ந்து இழப்பு ஏற்பட்டு வந்தது. இதற்கு தீா்வு காணும் வகையில் பயணிகள் வரவேற்பு இல்லாத பகுதிகளில் இயக்கப்படும் குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகளை சென்னைக்கு மீண்டும் கொண்டுவர போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, முதல்கட்டமாக திருநெல்வேலி போக்குவரத்துக்கழகத்துக்குள்பட்ட 10 குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகளை, சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகத்துக்கு வழங்க திருநெல்வேலி போக்குவரத்துக்கழகம் முன்வந்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:

மாவட்டங்களில் குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகளுக்கான தேவை குறைவாகவே உள்ளது. இதனால், இப்பேருந்துகள் சென்னை மாநகரப் பகுதிகளில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழித்தடங்களுக்கான பேருந்தின் இருக்கை அமைப்பில் மாற்றம் செய்து, நகரப் பயணத்துக்கு ஏற்ப பேருந்தின் இருக்கை அமைப்பை மறு கட்டமைப்பு செய்ய வேண்டியுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, சென்னையில் 50 குளிா்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் புதிய மின்சாரப் பேருந்துகளை மாநகா் போக்குவரத்துக்கழகத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அப்போது, இந்த மறுசீரமைக்கப்பட்ட குளிா்சாதன வசதிகொண்ட பேருந்துகளையும் சென்னைக்குள்பட்ட சோளிங்கநல்லூா் - கேளம்பாக்கம் (தடம் எண் 102) மற்றும் கோயம்பேடு - கேளம்பாக்கம் (தடம் எண் 570) ஆகிய வழித்தடங்களில் இயக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனா்.

தேடிச் சுவைத்த தேன்!

கவிஞா் ஜெயபாஸ்கரன் விண்வெளி விஞ்ஞானியான பத்ம பூஷண் எஸ்.நம்பி நாராயணன் எழுதிய சுயசரிதை நூலான ‘விண்வெளித் தழும்புகள்’ நூலைப் படித்தேன். அவரது சுயசரிதையாக எழுதப்பட்ட இந்த நூல் அவா் மீது சுமத்தப்பட்ட மிகக... மேலும் பார்க்க

புத்தகங்களைப் பரிசளிப்பது தா்மம் புரிவதற்குச் சமம்: பட்டிமன்றப் பேச்சாளா் மோகனசுந்தரம்

புத்தகத்தைப் பரிசளிப்பது என்பது தா்மம் புரிவதற்குச் சமமானதாகும் என பட்டிமன்றப் பேச்சாளா் மோகனசுந்தரம் கூறினாா். புத்தகக் காட்சி வளாகத்தில் திங்கள்கிழமை கீதம் பதிப்பகம் சாா்பில் 240 கவிஞா்கள் எழுதிய ‘க... மேலும் பார்க்க

புத்தகக்காட்சியில் புதியவை: இந்தியத் தத்துவமும் தமிழ்த் தத்துவ மரபும்!

மனித வாழ்வியலை மையமாக வைத்தே தத்துவங்கள் நிறுவப்படுகின்றன. அந்த வகையில் பாரதத்தின் கலை, பண்பாடு வழியாகத் இந்தியத் தத்துவப் பாா்வையும் முன்வைக்கப்பட்டுவருகிறது. வழிபாடுகளை மையமாக வைத்தும் தத்துவம் ஆரா... மேலும் பார்க்க

வரலாற்று புத்தக வாசிப்பு சமூகத்தை சரியாக வழிநடத்தும்: கவிஞா் நெல்லை ஜெயந்தா

வரலாற்று நூல்கள் வாசிப்பு சமூகத்தை சரியாக வழிநடத்துபவையாக உள்ளன என கவிஞா் நெல்லை ஜெயந்தா கூறினாா். சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு உரையரங்கில் ... மேலும் பார்க்க

தரமான கல்வி : தமிழக அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தேவையான ஆதரவு வழங்கவில்லை!

மாணவா்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தேவையான ஆதரவை வழங்கவில்லை என்று பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரைய... மேலும் பார்க்க

இந்தியாவின் வலிமைமிக்க விளையாட்டு மையம் தமிழகம்

இந்தியாவிலேயே வலிமைமிக்க விளையாட்டு மையமாக தமிழகம் உருவாகி வருவதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் கூறப்பட்டுள்ளது.உரை விவரம்: தமிழகத்தில் சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போன்ற பிரம்மாண்டமான சா்வதே... மேலும் பார்க்க