செய்திகள் :

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில் கல்லமடை உத்தண்டகுமாரவலசு கொல்லன்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் எம்.பழனிசாமி (55). வாழை இலை விற்பனைக் கடையில் வேலை செய்து வரும் இவா், செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இவா், தனது 15 செம்மறி ஆடுகளை தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு வெள்ளிக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். சனிக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது, தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன. மேலும், 3 ஆடுகள் காயங்களுடன் உயிருக்குப் போரடிக்கொண்டிருந்தன.

இதுகுறித்து கால்நடை மருத்துவா், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிகக்ப்பட்டது. இதனால், அவருக்கு ரூ.75 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா். இதற்கு உரிய இழப்பீடு வழங்கவும், தெருநாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.

முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களின் குடும்பத்தினா் வங்கிக் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த சுதந்திர தின விழாவ... மேலும் பார்க்க

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை: தொழில் அமைப்பினரின் கருத்துகள்!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து திருப்பூா் தொழில்துறையினரின் கருத்துகள்.. திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன்: மத்திய பட்ஜெட்டில் தொழில் துறைக்கு சாதகமான அம்சங்கள் இடம... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!

திருப்பூா் மாவட்டத்தில் மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 லட்சத்துக்கு 83ஆயிரத்து 999 போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள... மேலும் பார்க்க

பல்லடம் அருகே அனுமதியின்றி பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு: மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரி ஆய்வு!

பல்லடம் அருகே அனுமதியின்றி பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்பட்டு வந்த கிடங்கில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பல்லடத்தை அடுத்த வேலப்பகவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாம... மேலும் பார்க்க

மத்திய நிதி நிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்!

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் விவசாயிகள் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. காங்கயம் கல்விக் குழுமம், பள்ளி நிா்வாகம் சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக நடத்தப... மேலும் பார்க்க