செய்திகள் :

வெள்ளக்கோவில், காங்கயத்தில் ரூ.7.64 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்!

post image

வெள்ளக்கோவில், காங்கயம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.64 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி தலைமை வகித்தாா்.

இதில், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சி, இடைக்காட்டு வலசில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.97.21 லட்சத்தில் வீரசோழபுரம் ஊராட்சி வள்ளியரச்சல் - வீரசோழபுரம் சாலை முதல் செல்வபுரம் வழியாக பூமாண்டவலசு வரை சாலை மேம்பாட்டுப் பணி, மேட்டுப்பாளையம் ஊராட்சி இடைக்காட்டு வலசில் ரூ.86.07 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணி ஆகியவற்றை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சி, சாம்பவலசில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ.81.54 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணி, சிவன்மலை தோ் வீதியில் ரூ.1.23 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணி உள்ளிட்ட ரூ.7.64 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, காங்கயம் -திருப்பூா் சாலையில் தனியாா் நிதியின்கீழ் கட்டப்பட்டுள்ள பயணியா் நிழற்குடையையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ்ராஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராகவேந்திரன், சரவணன், அனுராதா, விமலாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் பணிகள்

திருப்பூா் மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு ரூ.62.32 கோடி மதிப்பீட்டில் கனவு இல்ல திட்டம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

பப்பாளி சாறு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளா்கள் 2 போ் உயிரிழப்பு

உடுமலை அருகே பப்பாளி சாறு (ஜூஸ்) தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். உடுமலை வட்டம், அந்தியூா் ஊராட்சிக்கு உள்பட்ட சடையகவுண்டன்ப... மேலும் பார்க்க

15 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாநகா் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் காவல் துறையினா் தி... மேலும் பார்க்க

அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 போ் கைது

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் ... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் அவிநாசியில் செவ்வாய்க... மேலும் பார்க்க