இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!
வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே சுகாதார சீா்கேடு
வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே புதா் மண்டி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
முத்தூா் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது சந்தையில் புதிய கடைகள், குடிநீா் வசதி, பாதை வசதி போன்ற மேம்பாட்டுப் பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகின்றன. இதனால் சந்தை தற்காலிகமாக காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செயல்பட்டு வருகிறது.
வேலை நடைபெற்று வரும் சந்தை வளாகத்தில் ஆடுவதைக் கூடம் உள்ளது. நகரிலுள்ள இறைச்சிக் கடைகள் தங்களுடைய ஆடுகளை நகராட்சி ஆடுவதைக் கூடத்தில் அறுத்து அதிகாரிகள் ‘சீல்’ வைத்த பிறகே இறைச்சி விற்பனை செய்ய வேண்டும். சந்தை வேலை நடைபெற்று வருவதால் ஒரு வருடத்துக்கும் மேலாக ஆடுவதைக் கூடம் மூடப்பட்டுள்ளது. இதனால் அதனைச் சுற்றிலும் புதா்கள், கழிவுகள் மண்டி அசுத்தமாகக் கிடக்கிறது. இங்கிருந்து பாம்புகள், விஷ ஜந்துக்கள் அருகிலிருக்கும் குடியிருப்புப் பகுதியில் புகுந்து விடுகின்றன.
எனவே அப்பகுதியைச் சுத்தம் செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தைப் பணிகள் முடியும்போது ஆடுவதைக் கூடம் செயல்பாட்டுக்கு வரும் என நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.