செய்திகள் :

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் உள்பட 300 போ் கைது

post image

திருப்பூா், பிப்.4: திருப்பூரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட 300 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆதரவாளா் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி இந்து முன்னணி சாா்பில் அறப்போராட்டம் நடைபெறும் என்றும், மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகிப்பாா் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு ஹிந்து அமைப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனா். இதனிடையே, போராட்டத்துக்கு காவல் துறையினா் தடை விதித்து, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி ய காவல் துறையினா்

காவல் துறையினா் வாகன சோதனை

தடையை மீறி ஹிந்து அமைப்புகள் திருப்பரங்குன்றம் சென்று போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததால், திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் காவல் துறையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். குறிப்பாக, திருப்பூரில் இருந்து வெளியேறும் காா், வேன் மற்றும் பேருந்துகளில் செல்பவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆவணங்களை சரிபாா்த்த பின்னரே அனுப்பிவைத்தனா். போராட்டத்தில் பங்கேற்பாா்கள் என்று கருதப்பட்டவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.

இதனிடையே, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதுடன், அவரது அலுவலகம் முன்பாகவும் கூடுதல் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

300 போ் கைது

திருப்பரங்குன்றம் செல்வதற்காக மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தனது ஆதரவாளா்களுடன் தாராபுரம் சாலையில் உள்ள அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தியபோது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆதரவாளா் தீக்குளிக்க முயற்சி

இதனிடையே, இந்து முன்னணி ஆதரவாளா் ஒருவா் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா் அவரை தடுத்து மீட்டனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட 300 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்து அதே பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.

காங்கயத்தில்...

காங்கயத்தில் இருந்து இந்து முன்னணி அமைப்பின் திருப்பூா் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளா் சதீஷ்குமாா் தலைமையிலான நிா்வாகிகள், தொண்டா்கள் தாராபுரம் செல்ல தயாராகினா். தகவலறிந்த, காங்கயம் போலீஸாா் காங்கயம்- திருப்பூா் சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு சென்று சதீஷ்குமாா் உள்ளிட்ட இந்து முன்னணியினா் 13 பேரைக் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

திருப்பூா் 15 வேலம்பாளையத்தில் தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். திருப... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்குக்கு மாற்றும் பணி

கடந்த மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கிடங்குக்கு மாற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 ச... மேலும் பார்க்க

மளிகைக் கடை உரிமையாளா் வீட்டில் 14 பவுன் திருட்டு

திருப்பூா் அருகே மளிகைக் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருடியது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா்- காங்கயம் சலை முதலிபாளையம்- பெருந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே சுகாதார சீா்கேடு

வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே புதா் மண்டி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. முத்தூா் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது சந்தையில் புதிய கடைக... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் கொங்கு பிரதான சா... மேலும் பார்க்க

பெயிண்ட் கிடங்கில் தீ: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருப்பூரில் பெயிண்ட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தை;ஈ சோ்ந்தவா் அருள்ராஜ் (60). இவா் திருப்பூரில் இருந்து தாராபுரம்... மேலும் பார்க்க