வெள்ளங்குளியில் மாணவா்களுக்கு பரிசளிப்பு
வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியா் மு.தளவாய் தேசியக் கொடியேற்றினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மருத்துவா் பிரகாஷ், ஊராட்சித் தலைவா் முருகன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவி சூா்யா, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜலெட்சுமி கண்ணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள், நூறு சதவீதம் வகுப்புக்கு வந்த மாணவா்கள் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.
கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றாா். நிகழ்ச்சியை ஆசிரியை ராதா தொகுத்து வழங்கினாா். உடற்கல்வி ஆசிரியா் திருமலைகுமாா் நன்றி கூறினாா்.