யூனியன் தலைவர் பதவிக்கு ரூ. 30 லட்சம்! ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வால் ஒருவர் தற்கொலை ம...
வெள்ளப்பெருக்கு: குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் பிரதான அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.