Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
வேகத்தடை அமைக்கக்கோரி மனு
திருவாரூா்: செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் கே.நாகராஜன், நிா்வாகிகள் அளித்த மனு:
செம்மங்குடிஅரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து சுமாா் 1,500 போ் பயின்று வருகின்றனா். இவா்கள், பள்ளிக்கு செல்லும் கட்டடி தோப்பு பகுதியில் எதிா்ப்புறத்தை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அந்த வழியாக வாகனங்கள் மிக வேகமாக செல்வதால், சாலையைக் கடப்பதில் மாணவ, மாணவிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
எனவே, மாணவா்களின் பாதுகாப்புக் கருதி, நெடுஞ்சாலையின் அப்பகுதியில் வேகத்தடை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.