வேடுவன் டிரைலர்!
நடிகர் கண்ணா ரவி நடித்த வேடுவன் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கைதி, லவ்வர் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கண்ணா ரவி. முழு கமர்சியல் கதைகளைத் தாண்டி ரத்தசாட்சி போன்ற சமூக ரீதியான கதையையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இறுதியாக இவர் கூலி திரைப்படத்தில் நாகர்ஜூனாவின் மகனாக நடித்து கவனம் ஈர்த்தார்.
தற்போது, கண்ணா ரவி நடிப்பில் வேடுவன் என்கிற இணையத் தொடர் உருவாகியுள்ளது. இதனை இயக்குநர் பவன் இயக்க, ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் ஜீ 5 நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
இதையும் படிக்க: சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது: விக்ரம் பிரபு
சஞ்சீவ் வில்லனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ரகுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இத்தொடர் அக். 10 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.