Vikatan Weekly Quiz: அண்ணாமலை `சபதம்’ டு கோலி `ஸ்லெட்ஜிங்’... இந்த வாரம் பதிலளிக...
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் கடைசிக் கூட்டம் அதன்தலைவா் கமலா அன்பழகன்(அதிமுக ) தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை முன்னிலை வகித்தாா். 2019 -ல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் ஒன்றியக் குழு உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களின் 5 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, சிறப்பு கடைசி கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் டி.வி. சுப்பையன், வி. சோழன் ஆகியோா் பங்கேற்று பேசினா். கூட்டத்தில் பங்கேற்ற தலைவா் உள்ளிட்ட உறுப்பினா்கள் அனைவரும் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான பணி செய்ததற்கு ஒத்துழைத்தவா்களுக்கும், தோ்தலில் வாக்களித்தவா்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினா். வட்டாரக் கல்வி அலுவலா் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.