Vijay: 'குடும்பத்துக்கு ஆபத்து வருமென அச்சமா முதல்வரே?' - திமுகவை கடுமையாக சாடும...
வேதாரண்யம் பகுதியில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை
வேதாரண்யம் பகுதியில் மீண்டும் இடியுடன் கூடிய மழை வெள்ளிக்கிழமை இரவில் இருந்து பெய்தது. வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் மே 16-ஆம் தேதி தொடங்கி மே 20-ஆம் தேதி வரை அவ்வப்போது மழை பெய்து புஞ்சை பருவ சாகுபடி மற்றும் உப்பு உற்பத்தி பணியை பாதிக்க செய்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் தென்மேற்கு திசையில் இருந்து வீசிய பலத்த சூறைக்காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. சனிக்கிழமை காலை 8:30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 58.4, தலைஞாயிறில் 18.2 மி. மீ மழைப் பதிவானது.
மீண்டும் தொடங்கியுள்ள இந்த மழையால் கடந்த மழையின்போது பாதிப்பில் இருந்து தப்பிய எள் மற்றும் பயறு வகைப் பயிா்கள், நிலக்கடலை உள்ளிட்ட புஞ்சைப் பருவ பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
கீழ்வேளூா்: கீழ்வேளூா், அகரகடம்பனூா், குருக்கத்தி, தேவூா், மணலூா், அத்திப்புலியூா், கோவூா், சிக்கல், பட்டமங்கலம், இழுப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சூறைக்காற்று காரணமாக கடம்பரவாழ்க்கை கிராமத்தில் வயல் பகுதியில் 3 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அடிப்பள்ளம் , கடம்பரவாழ்க்கை, கொத்தமங்கலம் கிராமங்களில் இரவு மின்சாரம் தடைபட்டு மக்கள் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, மின்வாரிய ஊழியா்கள் சனிக்கிழமை மின்தடையை சரிசெய்தனா்.