வேலூரில் செப். 19-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெற உள்ளது.
மாவட்ட ஆட்சியா் தலைமையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், பட்டு வளா்ச்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா். மேலும், கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனா்.
எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.