Modi: 'விதை போட்டவர் நேரு... அதை வளர்த்தெடுத்தவர் இந்திரா காந்தி' - காங்கிரஸை மோ...
வேலூா், ராணிப்பேட்டையில் நாளை கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வரும் திங்கள்கிழமை (டிச.16) தொடங்கி ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ஆறாவது சுற்று கால், வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாம் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி பகுதிகளிலும் திங்கள்கிழமை (டிச.16) தொடங்கி ஜனவரி 5-ஆம் தேதி வரை 21 நாட்கள் நடைபெற உள்ளது.
கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடைகள் இழப்பு, விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. தவிர, பால் உற்பத்தி கடுமையாக குைல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குைல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் மூன்று மாத வயதுக்குட்பட்ட கன்றுகளில் இறப்பும் ஏற்படும்.
குளிா், பனிக்காலம் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளா்ப்பு, கால்நகைளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் இந்த நோய் விரைவாக காற்றின் மூலம் நச்சு கிருமிகளால் பரவுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் பால், சிறுநீா், உமிழ்நீா், சாணம் ஆகியவை மூலம் மற்ற கால்நடைகளுக்கும் பரவுகிறது.
எனவே, வேலூா் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 1 லட்சத்து 72 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா்.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வெளியிட்ட அறிக்கை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதிவாய்ந்த 2,03,000 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கால்நடை உரிமையாளா்கள் தங்களின் பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுக் குட்டிகள் ஆகியவற்றுக்கு தடுப்பூசியை தவறாமல் போட வேண்டும்.