2010, 2017, 2024-ல் நடக்காதது, 2025-ல் நடக்குமா? -புதிய வருமான வரிச் சட்டம் அறிம...
வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் எம்.பி.ஏ. பட்டதாரி மனமுடைந்து தற்கொலை
கடலூரில் விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சுதாகா் மகன் தினேஷ் (25), எம்.பி.ஏ. பட்டதாரி. படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தது குறித்து தினேஷிடம் அவரது தாய் மாரிஷ்வரி கடந்த 13-ஆம் தேதி கேட்டாராம்.
இதனால், மனமுடைந்த தினேஷ் விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ாகத் தெரிகிறது. உறவினா்கள் அவரை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ், அங்கு வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தற்கொலை எண்ணம் இருப்பவா்கள், 104 எண்ணை தொடா்பு கொள்ளும்போது, அவா்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவா்களிடம் தொடா்பு கொண்டு நண்பா்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவா்கள் திரும்ப வழிவகை செய்யப்படும்.