'நிதியும் இல்லை; அதிகாரமும் இல்லை' - பேரவையில் புலம்பிய அமைச்சர் பிடிஆர்!
வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது
பெண்ணுக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.88 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மூா்த்திநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பவித்ரா. இவருக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாக திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டைச் சோ்ந்த ஞானசெல்வம் மகன் சூரஜ் (29) கூறினாா்.
இதையடுத்து, கடந்த 2023-ஆம் ஆண்டு பவித்ராவின் சகோதரா் சிரஞ்சீவி, கணவா் ஜெகதீஷ் ஆகியோரிடம் பல்வேறு தவணைகளில் வங்கிக் கணக்கு மூலமும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.88 லட்சத்தை சூரஜ் பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணையை வழங்கி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் தேனி மாவட்ட குற்றத் தடுப்புப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.