செய்திகள் :

வேளாங்கண்ணி: திருமணம் மீறிய உறவு; கணவரைக் கொன்றுவிட்டு நாடகம்- ஆண் நண்பருடன் மனைவி சிக்கியது எப்படி?

post image

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தனா (22). இவரது காதலி எலன் மேரி (21). இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். தனியார் விடுதியில் அரை எடுத்து தங்கியவர்கள் வேளாங்கண்ணி மாதா கோவிலில் திருமணம் செய்து கொண்டு அறையில் தொடர்ந்து இருந்துள்ளனர். இந்த நிலையில் வேளாங்கண்ணி ரயில் நிலையம் அருகே கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் உடல் கிடந்துள்ளது. வேளாங்கண்ணி போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, எலன் மேரி தனது கணவரை காணவில்லை என தேடி வந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற எலன் மேரி, கொலை செய்யப்பட்ட கிடப்பது தன் கணவர் ஜனார்த்தனா என்று கூறி கதறி அழுதிருக்கிறார்.

போலீஸ் கைது செய்த ஜீவன்

இதையடுத்து எலன் மேரியிடம் பொறுப்பு காவல் ஆய்வாளர் சுப்ரியா விசாரணை நடத்தியுள்ளார். அப்போது என் கணவரின் நண்பர்களான ஜீவன்(19), மற்றும் 15 வயது சிறுவன் ஒருவனும் எங்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தனர் என்றுள்ளார். முன்னுக்கு பின் முரணாக எலன் மேரி பேசியதில் அவர் மீது போலீஸார் சந்தேகமடைந்தனர். மேலும் பெங்களூர் தப்ப முயன்ற ஜனார்த்தனாவின் நண்பர்களான இருவரையும் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் உதவியுடன் போலீஸார் கைது செய்தனர்.

எலன் மேரி, ஜீவன், 15 வயது சிறுவன் ஆகியோரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ``ஜனார்த்தனா, எலன் மேரி இருவரும் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே காதலித்துள்ளனர். வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் வேளாங்கண்ணி வந்தவர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் பின்னர் ஜீவன், 15 வயது சிறுவனும் வேளாங்கண்ணி வந்துள்ளனர்.

நான்கு பேரும் ஒரே அறையில் தங்கியிருந்துள்ளனர். இந்தநிலையில் தான் ஜனார்த்தனா கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு பக்கம் ஜனார்த்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட எலன் மேரி, மறு பக்கம் அவரது நண்பரான ஜீவனையும் காதலித்துள்ளார். ஜீவனுடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளார். இதற்கு இடையூறாக இருந்த ஜனார்த்தனாவை ஜீவனுடன் சேர்த்து தீர்த்து கட்ட நினைத்திருக்கிறார் எலன் மேரி. தன் திட்டபடி ஜீவனும், அந்த சிறுவனும் ஜனார்த்தனாவை வெளியே அழைத்துச் சென்று கச்சிதமாக தீர்த்து கட்டி விடுகின்றனர்.

இதற்கிடையே ஜனார்த்தனாவை காணவில்லை என நாடகமாடிய எலன் மேரி அவர் உடலை பார்த்து கதறுவது போல் நடித்தது சினிமாவை விஞ்சும் விதமாக இருந்தது. கொலையில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்திருக்கிறோம். எலன் மேரியிடம் விசாரணையை தொடர்ந்து வருகிறோம்" என்றனர்.

போதைப்பொருள் கடத்தல்; அமெரிக்க FBI தேடிவந்த இந்திய வம்சாவளி... பஞ்சாப்பில் கைதுசெய்த போலீஸ்!

அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் ஷெஹ்னாஸ் சிங். இவர் கொலம்பியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு போதைப்பொருள் கடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த 26ம் தேதி அமெரிக்காவி... மேலும் பார்க்க

பீகார்: பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல்! - ரூ.25 கோடி மதிப்பிலான நகை கொள்ளை

பீகாரின் அர்ராவில் உள்ள தனிஷ்க் ஷோரூமில் இன்று ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர். பீகார் மாநிலம், அர்ரா காவல் நிலையப் பகுதியில் உள்ள ... மேலும் பார்க்க

ஸ்ரேயா கோஷல் கரியர் பற்றி பரவிய நியூஸ்; 'அது பொய்... உஷாராக இருங்கள்!'- மக்களை எச்சரிக்கும் டி.ஜி.பி

சமீபத்தில், 'பாடகி ஸ்ரேயா கோஷலின் கரியர் முடியப்போவதாகவும், அதற்கு காரணம் அவர் மைக் ஆன் ஆகியிருப்பது தெரியாமல் பேசியதும்' என்ற போஸ்ட் மற்றும் நியூஸ் லிங்க் வைரலாகியது. இப்படி பரவிய இந்த நியூஸ் லிங்க் ... மேலும் பார்க்க

5 கொரிய பெண்கள்; Excel Sheet, ரகசிய கேமரா- ஆஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய வம்சாவளி!

ஆஸ்திரேலியாவில் ஐந்து தென்கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக பிரமுகருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பாலேஷ் தன்கர். இந... மேலும் பார்க்க

பள்ளிக் காதலால் சந்தேகம்; மனைவியை சிக்கவைக்க விஷம் குடித்த புது மாப்பிள்ளை பலி - நடந்தது என்ன?

கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த பிரியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவருக்கும் கடந்த ஜனவரி 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலைய... மேலும் பார்க்க

திருப்பதி கோயில் வீடியோ விவகாரம்: TTF வாசனின் வங்கி கணக்கு முடக்கம்

டி.டி.எஃப் வாசன் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. தனது வீடியோக்கள், செயல்கள் ஆகியவற்றால் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டி வருகிறார் டி.டி.எஃப் வாசன். கடந்த ஆண்டு, ஜூலை மாதம் திருப்பதிக்கு சென்றிருக்கிறார் ... மேலும் பார்க்க