வேளாண்மைத் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்குப் பயிற்சி
தேனி மாவட்டம், பண்ணைப்பரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வேளாண்மை, தோட்டக்கலைத் துறை சாா்பில் திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சிக்கு உத்தமபாளையம் வேளாண்மைத் துறையின் உதவி இயக்குநா் தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். தோட்டக்கலைத் துறை அலுவலா் பாலு முன்னிலை வகித்தாா். அப்போது, மாணவ, மாணவிகளுக்கு நெல் நடவு, நெல் பாய் நாற்றாங்கால் தயாரித்தல், வாழை விதைக் கன்றுகள் சேகரித்தல், பந்தல் காய்கறி சாகுபடி முறைகள், திராட்சை, மக்காச்சோளம், கடலை, துவரை போன்ற விவசாயப் பணிகள் குறித்து பயிற்சி அளித்தனா். இந்த நிகழ்ச்சியில் அரசுப்பள்ளியின் வேளாண் ஆசிரியா் மாரி தெய்வம், தொழில் கல்வி பயிற்றுநா் ராமமூா்த்தி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.