செய்திகள் :

வைகோ : `தாராளமாக வெளியேறி கொள்ளலாம்..!’ - கட்சியில் மீண்டும் பிளவு? ; என்ன நடக்கிறது மதிமுக-வில்?

post image

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் மீண்டும் மதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது.

துரை வைகோ - மல்லை சத்யா
துரை வைகோ - மல்லை சத்யா

வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் இன்று ( ஜூலை 10) சென்னையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

அதில் மல்லை சத்யாவின் புகைப்படம் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மல்லை சத்யா கட்சியில் இருந்து விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வைகோ, " மல்லை சத்யாவை உடன் பிறவாத தம்பியாகத் தான் நினைத்தேன். என்னைப் பற்றி மிக மோசமாக, பேசக்கூடிய நபர்களுடன் தொடர்பில் இருக்கிறார். பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார்.

கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் தாராளமாக வெளியேறி கொள்ளலாம் என்றும், யார் வெளியேறினாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மல்லை சத்யாவின் பின்னணியில் திமுக இருப்பதாக கூறமுடியாது. அது உண்மையும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

மதிமுக
மதிமுக

இதனைத்தொடர்ந்து வைகோ குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய மல்லை சத்யா, "வைகோ சொன்ன வர்த்தையைத் தாங்கி கொள்ள முடியாத மனவேதனையில் இருக்கிறேன். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்கு கட்சித் தலைமையை வழங்குவதற்குத் தயாராகி விட்டார்.

இதுவரை அவரது உயிரை மூன்று முறை காப்பாற்றியிருக்கிறேன். ஆனால், இப்போது வைகோ, தனது மகனுக்காக, எனக்கு துரோகிப் பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ADMK: "அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்" - அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!

'அமித் ஷா பேட்டி'மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும். அந்த ஆட்சியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் எனக் கூறியிருந... மேலும் பார்க்க

பாஜக: "திமுக கூட்டணி சுக்குநூறாக உடையும்; அமித்ஷா சொன்னதே எங்களுக்கு வேத வாக்கு" - எல்.முருகன்

அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. திமுக கூட்டணி அப்படியே தொடர்கிறது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் கே... மேலும் பார்க்க

Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ளிகளில் சேர்ப்பு

சீனா நாட்டின் அதிகாரத்தின் கீழ் திபெத் இருந்து வருகிறது.அதன் பிடியிலிருந்து வெளியேற திபெத் முயன்று வருகிறது... போராடி வருகிறது.இந்த நிலையில், திபெத்தியன் ஆக்‌ஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது... மேலும் பார்க்க

பாமக: "என்னுடைய X, Facebook கணக்குகளை மீட்டுத் தாருங்கள்" - டிஜிபி-யிடம் ராமதாஸ் மனு

'பாமகவின் தலைவர் நானே' என்று கடந்த மாதம், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனால், பாமக நிறுவனத் தலைவரும், பாமக தலைவரும் ராமதாஸின் மகனுமான அன்புமணிக்கு மோதல் போக்குத் தொடங்கியது.ராமதாஸ், தேர்த... மேலும் பார்க்க