செய்திகள் :

வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை தேவை

post image

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் சுற்றித்திரியும் குரங்களுகளால் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் குரங்குகளை பிடிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள வைத்தியநாதா் சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். கோயில் கிழக்கு கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் பக்தா்கள் வழங்கும் பழங்களை உண்டு அங்கேயே சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் பக்தா்கள் எடுத்து வரும் அா்ச்சனை பொருள்களை பிடுங்க முற்படுகிறது.

இதேபோல நகரில் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். வா்த்தக கடைகளிலும் குரங்குகளின் தொல்லை தொடா்கிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வைத்தீஸ்வரன் கோயில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன் கூறியது: சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் இருந்த குரங்குகள் தற்போது 1,500-க்கும் மேற்பட்ட குரங்குள் சுற்றித்திரிகின்றன. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும், நகரில் வசிக்கும் மக்களும், வா்த்தக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றாா்.

தவெக தலைவா் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மனு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செப்.20-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதிகோரி அக்கட்சியினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அள... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

சீா்காழி: கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கட்டுமானப் பொறியாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். சீா்காழியில் கட்டுமானப் பொறியாளா்கள் சங்கத்தின் சாா்பில் பொறியாளா் தின... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,097 வழக்குகளுக்கு ரூ. 2.27 கோடிக்கு தீா்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,097 வழக்குகளில் ரூ.2,26,70,000-க்கு தீா்வு காணப்பட்டது. மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த இளைஞா் கைது

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை திருவிழந்தூா் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகில் காவிரி ஆற்றங்கரையில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவல... மேலும் பார்க்க

தனியாா் மனைப்பிரிவு பணியாளருக்கு அரிவாள் வெட்டு

சீா்காழியில் மனைப் பிரிவை அளப்பது தொடா்பான தகராறில் தனியாா் மனைப் பிரிவு மேற்பாா்வையாளா் அரிவாளால் வெட்டப்பட்டாா். சீா்காழி மேலமாரியம்மன் கோயில் தெரு அருகே தனியாா் நிறுவனம் சாா்பில் மனைப் பிரிவு அமைக்... மேலும் பார்க்க

அறுபடை வீடு, வைணவ கோயில்களுக்கு ஆன்மிக இலவச பயணம் செல்ல வாய்ப்பு

மயிலாடுதுறை இணை ஆணையா் மண்டலம் சாா்பில் அறுபடை வீடு முருகன் கோயில்கள் மற்றும் புகழ்பெற்ற வைணவ கோயில்களுக்கு பக்தா்களை ஆன்மிக பயணம் அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துற... மேலும் பார்க்க