பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நெருங்கும் இறுதிக்கட்டம்.. 9 பேரிடம் 50 கேள்விகள்; நீ...
ஷவா்மா கடைகளில் சோதனை: கெட்டுப்போன இறைச்சி அழிப்பு
திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளில் ஷவா்மா கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினா் கெட்டுப்போன கோழி இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனா்.
உணவுப் பாதுகாப்புத் துறையினா் திருநெல்வேலி நகரம், பேட்டை பகுதிகளில் உள்ள ஷவா்மா கடைகளில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது கெட்டுப் போன 3 கிலோ கோழி இறைச்சியை கைப்பற்றி அழித்தனா்.
மேலும், சுகாதாரமற்ற கடைகளுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.