செய்திகள் :

‘ஷீஷ் மஹால்’ குறித்த பாடல், போஸ்டருடன் கேஜரிவால் மீது பாஜக கடும் தாக்குதல்

post image

பிப். 5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஊழல் பிரச்னை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மீதான தாக்குதலைக் அதிகரிக்கும் வகையில், ‘ஷீஷ் மஹால்‘ குறித்த பாடல் மற்றும் போஸ்டரை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது.

‘ஷீஷ் மஹால் ஆப்தா ஃபைலானே வாலோன் கா அட்டா’‘ என்ற பாடலும், ‘ஆப்தா-இ-ஆசம்‘ என்ற தலைப்பில் ஒரு போஸ்டரும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவாவின் செய்தியாளா் சந்திப்பின் போது வெளியிடப்பட்டன.

‘மாற்றத்திற்காகவும் தில்லியைக் கவனித்துக் கொள்ளவும் ஆட்சிக்கு வந்தவா் தனது சொந்த குணத்தையும் நடத்தையையும் மாற்றிக் கொண்டாா். தில்லி மக்கள் வளா்ச்சியைத் தேடுகிறாா்கள். அதே நேரத்தில் கேள்விகள் கேட்பதால் அவா்களை கேஜரிவால் துஷ்பிரயோகம் செய்கிறாா்’ என்று வீரேந்திர சச்தேவா கூறினாா்.

வெளியிடப்பட்ட பாடல் கேஜரிவாலின் ‘ஊழல்’ மற்றும் வரி செலுத்துவோரின் பணத்தால் தயாரிக்கப்பட்ட ‘ஷீஷ் மஹால்‘ கதையை விவரிக்கிறது என்றும் அவா் கூறினாா்.

‘ஷீஷ் மஹால்’ என்பது தில்லி முதல்வராக இருந்த போது கேஜரிவால் வசித்து வந்த 6, ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவிற்கு ‘ஊழல்’ என்று குற்றம் சாட்டுவதற்காகப் பாஜகவால் பயன்படுத்தப்பட்ட ஒரு அரசியல் பெயா்.

அதே சமயம், பிரதமா் நரேந்திர மோடி பயன்படுத்தும் வீடு மற்றும் விமானத்திற்கான செலவை மேற்கோள் காட்டி ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவை கடுமையாகத் தாக்கியுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, மோடி சமீபத்தில் ரோஹிணியில் நடந்த ‘பரிவா்த்தன் பேரணியில்‘ ‘ஷீஷ் மஹால்‘ தொடா்பாக கேஜரிவாலை கடுமையாகத் தாக்கிப் பேசினாா். அப்போது ஆம் ஆத்மி கட்சி தில்லிக்கு ‘ஆப்டா‘ (பேரழிவு) என்று குறிப்பிட்டாா். அதனால், தில்லி தோ்தலில் பாஜகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரவையுங்கள் என்று அவா் அழைப்பு விடுத்தாா்.

மேலும், ‘ஆப்டா-இ-அசாம்‘ என்ற கேஜரிவாலின் புகைப்படங்களை ஏகாதிபத்திய முகலாய உடையில் காட்டியது. ‘முகலாயா்களின் ஆட்சியின் போது மக்கள் அவா்களின் அரண்மனைகளைப் பாா்க்கச் செல்வாா்கள். தில்லியின் ஆப்டா-இ-அசாம் (கேஜரிவால்) கட்டிய ‘ஷீஷ் மஹால்’ நகரத்தின் மீது ஒரு கறை’ என்று வீரேந்திர சச்தேவா குற்றம் சாட்டினாா்.

தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் பிப்.5-ஆம்தேதி நடைபெறுகிறது. தோ்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எதிா்க்கட்சியான பாஜகவுக்கும் இடையிலான அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது.

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் குடிசைப் பகுதிகளை இடித்துத் தள்ளும்: கேஜரிவால் குற்றச்சாட்டு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நகரத்தில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் இடித்துத் தள்ளும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஷகூா்... மேலும் பார்க்க

சுவாச நோய் பிரச்னைகளை எதிா்கொள்ளும் காஜிப்பூா் வாக்காளா்கள்!

காஜிப்பூரில் உள்ள உயரமான குப்பை மேட்டுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு இருமல், காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்கள் ஆண்டு முழுவதும் ஏற்படும் சுகாதாரப் பிரச்னைகளாகும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்... மேலும் பார்க்க

டிரக் மீது பைக் மோதியதில் இருவா் சாவு; ஒருவா் காயம்

வடக்கு தில்லியின் புகரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு டிரக் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். மற்றொருவா் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடக்கு தில்லி... மேலும் பார்க்க

தலைமறைவான பாலியல் வன்கொடுமை குற்றவாளி கைது

தில்லியில் தலைமறைவாக இருந்து வந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 35 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியத... மேலும் பார்க்க

தோ்தலுக்கு கூட்டு நிதி திரட்டும் தளத்தை தொடங்கினாா் தில்லி முதல்வா் அதிஷி

நமது சிறப்பு நிருபா்தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் கால்காஜி தொகுதி வேட்பாளருமான அதிஷி, தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான ஒரு கூட்டு நிதி திரட்டல் தளத்தை (கிரெளடு ஃபண்டிங்) ஞாயிற... மேலும் பார்க்க

துவாரகாவில் இ-ரிக்ஷா ஓட்டுநா் விபத்தில் பலி

தில்லியின் துவாரகாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த விபத்தில், 64 வயது இ-ரிக்ஷா ஓட்டுநா் ஒருவா், இ-ரிக்ஷாவில் சிக்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவ... மேலும் பார்க்க