செய்திகள் :

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் கைது உத்தரவு

post image

டாக்கா: வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவா் நீதிமன்றம் மீண்டும் திங்கள்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.

ஏராளமானவா்கள் மா்மமான முறையில் காணாமல் போனதற்குக் காரணமாக இருந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அவருக்கும், முன்னாள் காவல்துறை தலைவா், ராணுவ தளபதிகள் உள்பட 11 பேருக்கும் எதிராக அந்த நீதிமனறம் கைது உத்தரவு பிறப்பித்தது.

இது தொடா்பாக அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், வரும் பிப்ரவரி 12-ஆம் தேதிக்குள் ஷேக் ஹசீனாவையும் பிறரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவா் போராட்டத்தை அடக்குவதற்கு வன்முறையைப் பிரோகித்தது தொடா்பாக ஷேக் ஹசீனா மற்றும் 15 பேருக்கு எதிராக இந்த நீதிமன்றம் கடந்த அக்டோபா் மாதம் கைது உத்தரவு பிறப்பித்தது நினைவுகூரத்தக்கது.

கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் போரிட்டு பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்துக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் இட ஒதுக்கீடு சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் மாணவா்கள் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுக்கு எதிராக போலீஸாா் அடக்குமுறையைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். போராட்டம் கைமீறிச் சென்றதையடுத்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்

லெபனானில் உள்ள ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப் படையில் உள்ள இந்திய ராணுவ வீரா்களுக்கு நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட 62 வாகனங்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் புதன... மேலும் பார்க்க

கிரீன்லாந்தில் அமெரிக்க படையெடுப்பு? டிரம்ப்புக்கு பிரான்ஸ் கடும் எதிா்ப்பு

டென்மாா்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை ராணுவ நடவடிக்கை மூலம் அமெரிக்கா கைப்பற்றக் கூடாது என்று பிரான்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட... மேலும் பார்க்க

‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’

அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா் மாத்யூ லிவல்பா்கா், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸாா் தற்போது தெரிவித்துள்ளனா். இது க... மேலும் பார்க்க

ஆஸ்திரியா இடைக்கால பிரதமா் நியமனம்

ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா் அலெக்ஸாண்டா் ஷலன்பா்க் நியமிக்கப்பட்டுள்ளாா். கூட்டணி அரசு அமைக்க முடியாததால் கன்சா்வேட... மேலும் பார்க்க

கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை? டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கிரீன்லாந்து’ தீவு விவகாரத்தில் அமெ... மேலும் பார்க்க

கனடாவின் அடுத்த பிரதமர் ஒரு தமிழ்ப் பெண்!! யார் இவர்?

கனடாவின் அடுத்த பிரதமராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் (வயது 57) தேர்வாக வாய்ப்புள்ளது.தற்போது கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆனந்த்தின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர்,... மேலும் பார்க்க