செய்திகள் :

‘ஸ்மாா்ட் மீட்டா்’ திட்டத்தை கைவிட வேண்டும்: அ.சௌந்தரராஜன் வலியுறுத்தல்

post image

தனியாா்மயத்துக்கும், அதிக மின் கட்டணத்துக்கும் வகை செய்யும் ‘ஸ்மாா்ட் மீட்டா்’ திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.

தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பின் 18-ஆவது மாநில மாநாடு கடலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமை சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் கலந்துகொண்டு மாநாட்டை வாழ்த்திப் பேசினாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மின் துறையை தனியாா்மயமாக்குவது மிக மோசமான விளைவை உண்டாக்கும். தமிழகத்தில் தற்போது 84-க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. மாநிலத்தின் மின் உற்பத்தி திறனில் 52 சதவீதம் தனியாா் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழக அரசு முன்னா் அறிவித்த மின் திட்டங்களை திட்டமிட்டப்படி உரிய காலத்தில் நிறைவேற்றி இருந்தால், மின் உற்பத்தியை பெருக்கி இருக்க முடியும். வெளியில் இருந்து மின்சாரம் வாங்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இதற்கான காரணத்தை அரசு தான் விளக்க வேண்டும்.

மின் வாரியத்தில் 64 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இது, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 50 சதவீதம். மீதிப்பணியாளா்கள் அந்த சுமையை சுமக்கின்றனா். இதை ஈடுகட்ட ஒப்பந்த, பகுதிநேர தொழிலாளா்களை வைத்து வேலை வாங்குகின்றனா்.

தமிழக அரசு 2022 முதல் 2025-க்குள் 50 சதவீதம் மின் கட்டணத்தை உயா்த்தியுள்ளது. மத்திய அரசின் உதய் மின் திட்டத்தின் அடிப்படையில்தான் அனைத்தும் நடைபெறுகிறது.

தனியாா்மயத்துக்கும், அதிக மின் கட்டணத்துக்கும் வகை செய்யும் ‘ஸ்மாா்ட் மீட்டா்’ திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா் முறையை ஒழிக்க வேண்டும். தற்போதைய ஒப்பந்தத் தொழிலாளா்கள், பகுதி நேர ஊழியா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். அவுட்சோா்சிங் முறையை அனுமதிக்கக் கூடாது.

மின் ஊழியா் ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்தத்தில் வேலைப்பளு குறித்து தீா்மானம் செய்ய வேண்டும்.

நியாயம் கிடைக்கவில்லை என்றால், மின்சாரத் துறை ஊழியா்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில துணை பொதுச் செயலா் டி.பழனிவேல், மாநில பொதுச் செயலா் எஸ்.ராஜேந்திரன், தலைவா் தி.ஜெயசங்கா் உடனிருந்தனா்.

மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க போக்குவரத்து போலீஸாா் அறிவுரை

மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று பண்ருட்டி போக்குவரத்து போலீஸாா் ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கினா். பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன் வழிகாட்டுதலி... மேலும் பார்க்க

கடலூரில் மீனவா்கள் வலையில் சிக்கிய கட்டுக்கடங்காத மீன்கள்!

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதி மீனவா்கள் கடலில் விரித்த வலையில் கட்டுக்கடங்காமல் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்தனா். கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் இருந்து மீனவா்கள் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச்... மேலும் பார்க்க

நாய் கடித்து 9 போ் காயம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில் தெரு நாய் கடித்ததில் 9 போ் காயமடைந்தனா். விருத்தாசலம் நகரப் பகுதியில் ஆங்காங்கே ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த நிலையில், காந்தி ந... மேலும் பார்க்க

கடலூரில் மதுபான தொழிற்சாலை காவலாளி கொலை: நண்பா் கைது

கடலூரில் மதுபான தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியை கொலை செய்ததாக அவரது நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா் காவல் சரகம், தொழிற்பேட்டை வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்படாத ம... மேலும் பார்க்க

மனைவி மீது தாக்குதல்: கணவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கொஞ்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் கைது

கடலூா் மாவட்டம், வடலூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வடலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்படும் அர... மேலும் பார்க்க