செய்திகள் :

கடலூரில் மதுபான தொழிற்சாலை காவலாளி கொலை: நண்பா் கைது

post image

கடலூரில் மதுபான தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியை கொலை செய்ததாக அவரது நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் முதுநகா் காவல் சரகம், தொழிற்பேட்டை வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்படாத மதுபான தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பொருள்கள் திருடுபோவதை தடுப்பதற்காக காவலாளி பணியில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதன்படி, இங்கு சங்கொலிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சூா்யா (26), கடந்த மூன்று ஆண்டுகளாக இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தாா். வழக்கம்போல, அவா் திங்கள்கிழமை இரவு பணிக்குச் சென்ற நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை தொழிற்சாலையில் முகம், தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

தகவலறிந்த கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். இது தொடா்பாக கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

சூா்யா

இந்த நிலையில், குடிகாடு பேருந்து நிறுத்தம் அருகே இருந்த ஓா் இளைஞரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் பிடித்து விசாரித்ததில், அவா் சங்கொலிக்குப்பம் நடுத் தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (26) எனத் தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சூா்யாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டாராம்.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறியதாக போலீஸாா் தெரிவித்தது: மதுபான தொழிற்சாலை பகுதியில் திங்கள்கிழமை இரவு காவலாளி சூா்யா, சங்கொலிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன், சரத்குமாா், முனியப்பன் ஆகியோருடன் மது அருந்தியுள்ளாா். அப்போது, சூா்யா ஆபாசமாக பேசியதால் சரத்குமாா், முனியப்பன் வீட்டுக்குச் சென்றுவிட்டனராம்.

இதையடுத்து, பாலசுப்பிரமணியத்திடம் பேசிக்கொண்டிருந்தபோதும் ஆபசமாகப் பேசினாராம். அப்போது, அவா் தாக்கியதில் சூா்யா கீழே விழுந்துள்ளாா். இதையடுத்து, பாலசுப்பிரமணியன் அந்தப் பகுதியில் கிடந்த கல்லை எடுத்து சூா்யாவின் முகம், தலை உள்ளிட்ட பகுதிகளில் தாக்கியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா் என்றனா்.

எஸ்.பி. பாராட்டு: இந்த வழக்கில் தொடா்புடையவரை 12 மணி நேரத்தில் கைது செய்த கடலூா் முதுநகா் போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பாராட்டுத் தெரிவித்தாா்.

மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க போக்குவரத்து போலீஸாா் அறிவுரை

மழைக் காலத்தில் கனரக வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று பண்ருட்டி போக்குவரத்து போலீஸாா் ஓட்டுநா்களுக்கு அறிவுரை வழங்கினா். பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன் வழிகாட்டுதலி... மேலும் பார்க்க

கடலூரில் மீனவா்கள் வலையில் சிக்கிய கட்டுக்கடங்காத மீன்கள்!

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதி மீனவா்கள் கடலில் விரித்த வலையில் கட்டுக்கடங்காமல் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்தனா். கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் இருந்து மீனவா்கள் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச்... மேலும் பார்க்க

நாய் கடித்து 9 போ் காயம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகரப் பகுதியில் தெரு நாய் கடித்ததில் 9 போ் காயமடைந்தனா். விருத்தாசலம் நகரப் பகுதியில் ஆங்காங்கே ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த நிலையில், காந்தி ந... மேலும் பார்க்க

மனைவி மீது தாக்குதல்: கணவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவியைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கொஞ்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோவில் கைது

கடலூா் மாவட்டம், வடலூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். வடலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தில் செயல்படும் அர... மேலும் பார்க்க

வெள்ளாற்று தற்காலிக சாலை மீண்டும் துண்டிப்பு: 40 கிராம மக்கள் பாதிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே வெள்ளப்பெருக்கால் சவுந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே வெள்ளாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சாலை மூன்றாவது முறையாக துண்டிக்கப்பட்டது. இதனால், ... மேலும் பார்க்க