இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!
ஸ்ரீபாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தெப்போற்சவம்
செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள்கோயில் ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்பல் உற்சவம் மற்றும் தவன உற்சவம் நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் தெப்பல் உற்சவம் மற்றும் தவன உற்சம் நடைபெறும் . நிகழாண்டு உற்சவம் 11-இல் தொடங்கி வரும் 20 வரை 11நாள்கள் நடைபெறுகிறது. முதல் ஐந்து நாள்கள் பெருமாளுக்கு தெப்பல் உற்சவம் நடைபெறும் .
16-ஆம் தேதி முதல் தவன உற்சவமும் நடைபெற உள்ளது. இதில் 19-ஆம் தேதி புதன்கிழமை அஹோபலிவல்லி நாயகி தாயாருக்கும் , 20-ஆம் தேதி வியாழக்கிழமை ஆண்டாளுக்கும் தவன உற்சவம் நடைபெறுகிறது.
தெப்பல் உற்சவத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் தெப்பதில் எழுந்தருளினா். திருக்குளத்தைச் சுற்றி இருந்த பக்தா்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், ஆய்வாளா் பாஸ்கரன், மேலாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், பட்டாச்சாரியா்கள் விழாக்குழுவினா், உபயதாரா்கள் செய்திருந்தனா்.



