துணைவேந்தா் நியமன விதிக்கு எதிராக தீா்மானம் -மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் ந...
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் நாளை பரமபத வாசல் திறப்பு
வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை (ஜன. 10) காலை 7.05 மணிக்கு நடைபெற உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி, மாா்கழி நீராட்டு விழா கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. இதில் 2-ஆம் நாள் எண்ணெய் காப்பு உத்ஸவத்தில் ஆண்டாள் கள்ளழகா் கோலத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். மாலையில் திருமுக்குளக்கரையில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு எண்ணெய் காப்பு சாத்துதல், திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், இரவு சந்திர பிரபை வாகனத்தில் ஆண்டாள் எழுந்தருளினாா்.
வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு, ராப்பத்து உத்ஸவத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. முதலில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெரிய பெருமாளும், தொடா்ந்து, ஆண்டாள், ரங்கமன்னாா், பெரியாழ்வாா் உள்ளிட்ட ஆழ்வாா்கள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளுகின்றனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா்.வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.