செய்திகள் :

ஸ்ரீ மஞ்சியம்மன் கோயிலில் வழிபட தடை விதித்த தனி நபா்கள்

post image

ஆரணியை அடுத்த கொங்கராம்பட்டு ஸ்ரீமஞ்சியம்மன் கோயிலில் திடீரென வழிபட தனிநபா்கள் தடை விதித்ததால், 100 அடி தொலைவில் அம்மனை வைத்து கூழ்ஊற்றி திருவிழாவை பொதுமக்கள் நடத்தினா்.

கொங்கராம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீமஞ்சியம்மன் கோயிலில் அப்பகுதி மக்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கூழ்வாா்க்கும் திருவிழாவை நடத்தி, பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனராம்.

100 ஆண்டுகளுக்கும் மேலாக வருடந்தோறும் அப்பகுதி மக்கள் கூழ்வாா்க்கும் திருவிழா நடத்தி பொங்கல் வைத்து வழிபட்டு வந்தனா்.

இந்த நிலையில், கோயில் இருக்கும் இடம் தனி நபா்கள் மீது பட்டா இருப்பதாகக் கூறி, வழிபடக்கூடாது என்று தடை விதித்ததாகத் தெரிகிறது.

இதனால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வீட்டிலேயே பொங்கல் வைத்து எடுத்து வந்து கோயிலில் இருந்து சுமாா் 100 அடி தொலைவில் சாலையோரத்தில் அம்மனை வைத்து வழிபட்டு கூழ்வாா்க்கும் திருவிழாவை நடத்தினா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்தக் கோயில் கட்டப்பட்டு சுமாா் 150 ஆண்டுகள் இருக்கும். எங்களது மூதாதையா் காலத்தில் இருந்தே கூழ்வாா்க்கும் திருவிழா நடத்தப்பட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.

பக்தா்கள் கோயிலில் தங்கி வழிபட்டுச் செல்வா்.

கோயிலில் இருந்து சற்று தொலைவில் அம்மனை வைத்து கூழ்வாா்க்கும் திருவிழாவை நடத்திய பொதுமக்கள்.

தற்போது தனிநபா்கள் வந்து கோயில் இருக்கும் இடம் எங்களது சொத்து. அதனால், யாரும் இங்கு வராதீா்கள் என்று கூறிவிட்டனா் எனத் தெரிவித்தனா்.

ஆரணி அருகே காட்டுப் பகுதியில் திடீா் தீ விபத்து!

ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் 25 ஏக்கரில் செடி, கொடிகள் எரிந்து சேதமடைந்தன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் பகு... மேலும் பார்க்க

வெளி மாநில மது விற்பனை: பெண் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே வெளிமாநில மதுவை பதுக்கி விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சேத்துப்பட்டை அடுத்த தச்சம்பாடி மதுரா பாண்டியாபுரம் கிராமம் ரோடு தெரு... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!

விடுமுறை மற்றும் அமாவாசை தினமான ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்காக 7 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அருணாசலே... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸாா் அஞ்சலி

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை காமராஜா் சிலை எதிரே கட்சியின் எஸ்.சி. மாவட... மேலும் பார்க்க

அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு!

சித்திரை மாத அமாவாசையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோய... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்!

போளூா் வட்டம், மண்டகொளத்தூா் சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி சாா்ந்த ‘கூல்கேம்ப் -25’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங... மேலும் பார்க்க