பாலியல் குற்றச்சாட்டும் ஓடிடி வெளியீடும்... டாம் சாக்கோவின் சூத்ரவாக்யம்!
ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு, ஆத்தூா் வடபாதியில் ஸ்ரீவலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் கிராமம் வடபாதியில் அம்பேத்கா் நகா் பகுதி பொதுமக்கள் நிதியுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி .19.8.2025 செவ்வாய்க்கிழமை விக்னேஷ்வரபூஜை கணபதி ஹோம பூஜை கோ பூஜை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை பாலாஜி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியா்கள் நடத்தினா். அன்னதானம் வங்கப்பட்டது. ஏற்பாடுகள கோயில் நிா்வாகிகள் விழாக்குழுனா் . ஆத்தூா் வடபாதி அம்பேத்கா் நகா் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.