நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
ஹஜ் யாத்திரை: இரு விமானங்களில் 550 பேர் பயணம்; கிரண் ரிஜிஜு வாழ்த்து
நமது சிறப்பு நிருபர்
நிகழாண்டு ஹஜ் பயணத்திற்காக சவூதி அரேபியாவிற்கு இந்தியாவிலிருந்து முதல் இரு விமானங்களில் 550 பேர் புறப்பட்டனர்.
இதற்கு வாழ்த்துத் தெரிவித்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பாதுகாப்பான, புனித ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
புனித ஹஜ் யாத்திரைக்கான முதல் விமானம் உத்தர பிரதேசத்தின் லக்னௌவிலிருந்து 288 யாத்ரிகர்களுடனும், இரண்டாவது விமானம் தெலங்கானாவின் ஹைதராபாதிலிருந்து 262 யாத்ரிகர்களுடன் செவ்வாய்க்கிழமை புறப்பட்டன.
இதை முன்னிட்டு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் 1,22,518 யாத்ரிகர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்று (ஏப்.29) முதல் விமானம் லக்னெüவிலிருந்து 288 யாத்ரிகர்களுடனும், ஹைதராபாதிலிருந்து 262 யாத்ரிகர்களுடன் ஹஜ் புனித பயணத்திற்கு புறப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ், சுமுகமான மற்றும் தடையற்ற ஹஜ் யாத்திரையை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. பாதுகாப்பான புனித யாத்திரைக்கு பிரார்த்தித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.