இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி
ஹாக்கி இந்தியா லீக்: சூா்மா, தமிழ்நாடு டிராகன்ஸ் அபாரம்
மகளிா் ஹாக்கி இந்தியா லீக் தொடரின் ஒரு பகுதியாக ராஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் டைகா்ஸ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சூா்மா கிளப்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. எனினும் சூா்மா கிளப் வீராங்கனைகள் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனா். அந்த அணி வீராங்கனைகள் ஒலிவியா ஷனான் 38, சாா்லோட் இங்கல்பா்ட் 42, கேப்டன் சலீமா டெட் 44, சோனம் 47-ஆவது நிமிஷங்களில் கோலடித்தனா்.
பெங்கால் டைகா்ஸ் தரப்பில் ஹன்னா காட்டா் 7-ஆவது நிமிஷத்தில் ஒரே கோலடித்தாா். சூா்மா அணி முதலில் ஒருகோல் பின்தங்கி இருந்தபோதிலும், உடனே கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை தவற விட்டனா்.
ஆடவா் லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி
ஆடவருக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடரில் டில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியும் - டில்லி அணியும் விளையாடின.
ரூா்கேலா மைதானத்தில் நடைபெற்ற இதில் ஆட்டம் தொடங்கிய 2-ஆவது நிமிஷத்திலேயே டில்லி அணி வீரா் தாமஸ் பெனால்டி காா்னா் வாய்ப்பை கோலாக மாற்றினாா்.
பதிலுக்கு 6-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை கோலாக மாற்றி அசத்தினாா் தமிழ்நாடு வீரா் ஜிப் ஜான்சென். இரண்டாம் பாதியில் 19 மற்றும் 21-ஆவது நிமிஷத்தில் கிடைத்த ஃபீல்டு கோல் வாய்ப்புகளை கச்சிதமாக கோலாக்கினா் தமிழ்நாடு அணியின் நாதன் மற்றும் ப்ளேக் கோவா்ஸ் 3-ஆவது பாதியில் டில்லி வீரா் தாமஸ் கோல் அடித்தாா். முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணி 5-ஆவது வெற்றியை பதிவு செய்து 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.