அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
ஹிட்லர் பாணியில் எலான் மஸ்க்! என்ன நடந்தது?
ஜெர்மன் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் பாணியில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் பொது மேடையில் வணக்கம் வைத்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை (ஜன. 20) பதவியேற்றாா். அவருடன், துணை அதிபா் ஜே.டி.வான்ஸும் பதவியேற்றுக் கொண்டாா்.
இதனிடையே, டொனால் டிரம்ப் பதவியேற்றதைக் கொண்டாடும் விதமாக திங்கள்கிழமை(ஜன. 20) நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உலக பெரும் கோடீஸ்வரரும் டொனால்ட் டிரம்புக்கு மிக நெருக்கமானவருமான எலான் மஸ்க், “இது சாதாரண வெற்றி அல்ல” என்று பேசினார். வாக்காளர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது, தனது வலக்கையை மார்பில் வேகமாக தட்டிக்கொண்டு அங்கிருந்த மக்களை நோக்கி கை விரல்களை ஒன்றிணைத்து விரித்துக்கொண்டு மேலே கையை நீட்டி தோள்பட்டை அளவுக்கு உயர்த்தியபடி ஹிட்லர் பாணியில் வணக்கம் தெரிவித்தார்.
இந்த நிலையில், எலான் மஸ்கின் செய்கை விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. ஹிட்லரை பின்பற்றும் நாஸிக்கள் கடைப்பிடிக்கும் பழக்கத்தை எலான் மஸ்க் பின்பற்றியிருப்பதாக சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு விமர்சிக்கின்றனர்.
மேலும், நாஸிக்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக அறியப்பட்ட ஆஸ்ச்விட்ஸ் பகுதிக்கு எலான் மஸ்க் கடந்தாண்டு சென்று அங்குள்ள மக்களை சந்தித்ததையும் குறிப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இன்னொருபுறம், டொனால்ட் டிரம்பை எதிர்த்து கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், மேற்கண்ட இதேபாணியில் சைகை செய்திருப்பதையும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், “ஒவ்வொருத்தரும் ஹிட்லரே” என்கிற விமர்சனத்தால் நீங்கள்(ஜனநாயக கட்சி தரப்பு) என் மீது விமர்சனங்களை சுமத்துவதை கேட்டுக்கேட்டு புளித்துப்போய் விட்டதாகப் பொருள்பட பேசி விமர்சனங்களுக்கு பதிலளித்திருக்கிறார் எலான் மஸ்க்.