செய்திகள் :

ஹிந்தி- தமிழர்கள் பிரச்னை: பவன் கல்யாணுக்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

post image

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்து பேசியுள்ளார்.

ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழர்களை சீண்டும் விதமாக ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

”ஹிந்தியை தென்னிந்தியாவில் திணிக்கிறார்கள் என்கிறார்கள். எல்லாம் தேசிய மொழிதானே. தமிழ்நாட்டில் ஹிந்தி வரக்கூடாது என்கிறார்கள்.

அப்போது எனக்கு தோன்றியது என்னவென்றால் ஹிந்தி மட்டும் வேண்டாம் என்கிறார்கள் பிறகு ஏன் தமிழ்ப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்கிறீர்கள்?” என பவன் கல்யான் பேசியது தமிழகத்தி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பதிவில் அவரது தாய்மொழியான கன்னடத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

’ஹிந்தியை எங்கள் மீது திணிக்காதீர்கள்’ என்பது மற்ற மொழியை வெறுப்பதற்காக அல்ல. அது எங்களது தாய்மொழியை பெருமையுடன் பாதுகாப்பதாகும். தயவுசெய்து இதை யாராவது பவன் கல்யாணுக்கு தெரிவியுங்கள் எனக் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அரசியல் குறித்து பல்வேறு பதிவுகளை தொடர்ச்சியாக பதிவிட்டு வரும் பிரகாஷ் ராஜ் தற்போது தமிழர்களுக்காக பேசியது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடைசியாக தமிழில் ராயன் படத்தில் நடித்திருந்தார். மீண்டும் தனுஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

தற்போது ஜன நாயகன், ரெட்ரோ படங்களில் நடித்துள்ளார். மேலும் சில தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

சிக்கந்தர் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சல்மான் நடிப்பில் உருவாகிவரும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் சிக்கந்தர் என... மேலும் பார்க்க

சலார் - 2 ஒத்திவைப்பு?

சலார் - 2 படத்தின் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேஜிஎஃப் - 2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கினார். இந்த... மேலும் பார்க்க

பெருசு - ஸ்னீக் பீக் விடியோ வெளியீடு!

பெருசு படத்தின் ஸ்னீக் பீக் விடியோ வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பெருசு’. இப்படத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த்,... மேலும் பார்க்க

டெஸ்ட் - மாதவன் அறிமுக விடியோ வெளியீடு!

டெஸ்ட் திரைப்படத்தின் நடிகர் மாதவன் கதாபாத்திர அறிமுக விடியோ வெளியிடப்பட்டுள்ளது. மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்... மேலும் பார்க்க

டில்லி ரிட்டன்ஸ்! கைதி - 2 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கைதி - 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.நடிகர் கார்த்தி மெய்யழகன் திரைப்படத்திற்குப் பின், ’வா வாத்தியர்’ வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அதேநேரம், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில... மேலும் பார்க்க

கூலி - ரஜினியின் மகளாக ஷ்ருதி ஹாசன்?

கூலி படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசன் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்... மேலும் பார்க்க