Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விள...
'1 அடி அடித்தால் 2 அடி கொடுப்பேன்; என்னிடம் மிரட்டல் வேண்டாம்' - அண்ணாமலை
கோவை வரதராஜபுரம் பகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கரூரில் 606 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். ஏடிஜிபி டேவிட்சன் 500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறினார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட அறிக்கையில், 350 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

முதலமைச்சர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதை விட்டுவிட்டு, சிபிஐ விசாரணைக்கு ஆதரவளித்து உண்மை குற்றவாளிகளை வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
திருமாவளவன் நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும். இது போன்ற வன்முறை, வெறுப்பு அரசியல், மிரட்டல் போன்றவற்றால் தமிழ்நாட்டில் என்ன மாற்றத்தை அளிக்க போகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படுவது கிடையாது. ஒரு அடி அடித்தால், 2 அடி கொடுக்கிற ஆள். இந்த உருட்டல், மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம்.
பல ரெளடிகளை பார்த்துவிட்டு தான் அரசியலுக்கு வந்துள்ளேன். இந்த விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை. சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை என்றால், முதலமைச்சர் எதற்காக அந்தப் பதவியில் இருக்க வேண்டும்.
முதலமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாது. ஃபாஸ்கான் நிறுவனத்தினருக்கு தமிழ் தெரியாது. அமைச்சர் டிஆர்.பி ராஜா முதலமைச்சரை நன்கு ஏமாற்றுகிறார். அண்டை மாநிலங்களில் சத்தமே இல்லாமல் பல ஆயிரம் கோடிகள் உள்ளே வருகிறது. திராவிட மாடல் என்று கூறிய விளம்பரப்படுத்தி மாட்டிக்கொண்டார்கள்.

டிஆர்பி ராஜா பேச்சை குறைத்து, செயலில் அதிகமாக ஈடுபட வேண்டும். அதிகமாக பேசியதன் விளைவு தான் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். விஜய்யின் சித்தாந்தம் வேறு, எங்களுடைய சித்தாந்தம் வேறு. இதில் அரசியல் சாயம் எல்லாம் பூசுவது அழகில்லை.” என்றார்.