செய்திகள் :

1,000 வேலைகளுக்கு AI-ஐ மூலம் விண்ணப்பிக்கச் செய்துவிட்டு தூங்கிய நபர்; எழுந்ததும் காத்திருந்த ஆஃபர்!

post image

தற்கால தொழில்நுட்ப யுகத்தில், செயற்கை நுண்ணறிவின் வருகை (AI - Artificial intelligence) பல்வேறு தளங்களில் மனிதர்களின் வேலையை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு அல்லது எளிமையாக்கிக்கொண்டு வருகிறது. கட்டுரை எழுதுதல், ஆவணங்களைத் தயாரித்தல், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடிட்டிங் எனப் பல்வேறு வகைகளில் AI-ஐ மக்கள் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அந்த வரிசையில், ஒருநபர் தான் தூங்கும் நேரத்தில் 1,000 வேலைகளுக்கு AI மூலம் தானாக விண்ணப்பிக்கச் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

AI

ரெட்டிட் (Reddit) தளத்தில் தனது அனுபவத்தைப் பகிர்ந்த அந்த நபர், ``AI bot ஒன்றை நான் உருவாக்கினேன். இதுவே, வேலை விவரங்களை ஆராய்ந்து, அதற்கேற்றவாறு ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி CV-க்களை உருவாக்கி, வேலைக்கு எடுப்பவர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. தானாகவே வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறது. இவையனைத்தையும் நான் தூங்கும்போது அது செய்கிறது. இதன் மூலம், ஒரே மாதத்தில் 50 நேர்காணல்களைப் பெற எனக்கு இது உதவியது.

ஒவ்வொரு வேலைக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட CV-க்கள் இதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தகைய முறை நம்ப முடியாத அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. ஒவ்வொரு வேலை விவரத்துக்கும் ஏற்றவாறு CV-க்கள் உருவாக்குவதன் மூலம், AI மற்றும் வேலைக்கு ஆள் எடுப்பவர்களால் கவனிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கிறது. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பார்க்கும்போது, வேலை உலகில் இது ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அதேசமயம், AI மூலம் தானாக வேலைக்கு விண்ணப்பிப்பது பற்றிய கேள்வியும் எழுகிறது.

I used AI to automatically apply for 1000 jobs - and I got 50 interviews!
by inGetEmployed

அப்போது, வேலைக்கான தேர்வு செயல்முறையை மேம்படுத்த முற்படும்போது, பணிச்சூழலில் அடிக்கடி மாற்றத்தை ஏற்படுத்தும்போது மனித வளத்தை இழக்க நேரிடும். எனவே, செயற்கை நுண்ணறிவின் செயல்திறன் மற்றும் மனித தொடர்புகளுக்கிடையே ஒரு நுட்பமான சமநிலையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான், வேலையின் எதிர்காலத்தை உருவாக்க முடியும். அது வெறும் உற்பத்தியைச் சார்ந்து மட்டுமல்லாமல், அனைவருக்கும் நிறைவானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PesalamVaanga

Ooty: முழுவதுமாக டீசல் இன்ஜினுக்கு மாறும் மலை ரயில்; சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் ரயில்வே நிர்வாகம்

பிரிட்டிஷ் ஆட்சியின்போது மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிக்கு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. அடர்ந்த வனத்திற்கு ஊடாகவும் ஆறுகளுக்குக் குறுக்கேயும் ரயில் பாதை அமைக்கப்பட்டது. செங்குத்து மலைச்சரிவில் சுவிட்ச... மேலும் பார்க்க

'உலகின் 6 நாடுகளில் ஒன்று இந்தியா!' - பெருமை சேர்த்த தமிழர்; இனி இஸ்ரோ தலைவர்-யார் இந்த V.நாராயணன்?

உலகத்தையே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்ததில் இஸ்ரோவிற்கு முக்கிய பங்கு உண்டு. இப்போது அந்த இஸ்ரோவையே தமிழ்நாடு பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் V. நாராயணன். ஆம்...தமிழ்நாட்டை சேர்ந்த V. நாரா... மேலும் பார்க்க

AI: ஏ.ஐ-யிடம் கேட்கக் கூடாத கேள்விகளும், சொல்லக்கூடாத ரகசியங்களும்... கவனம் மக்களே!

சந்தேகங்களை கூகுளில் கேட்ட காலம் போய், எதுவாக இருந்தாலும் ஏ.ஐ-யிடம் கேட்கும் காலம் வந்துவிட்டது. நியூயார்க்கில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் எடுத்த சர்வே ஒன்றில், ஐந்தில் ஒரு அமெரிக்கர் உடல்நலம் சம்பந்தமான... மேலும் பார்க்க

``இனி போர்களில் AI'' - உக்ரைன் அதிகாரி சொல்வதென்ன?

எதிர்காலத்தில் ராஜ்ஜியங்களுக்கு இடையிலான போர்களில் கூட செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனை சாத்தியப்படுத்துவதற்கான மிக முக்கிய கச்சா பொருள் உக்ரைனிடம் உள்ளது. உக்ரைன் - ரஷ்ய... மேலும் பார்க்க

CCTV: 'உங்கள் வீட்டிற்கு இலவச சிசிடிவி கேமரா வேண்டுமா... எங்கே, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?'

சிசிடிவி கேமராக்கள் அவசியமாகிறதுதிருட்டு, பாலியல் வன்கொடுமைகள், குழந்தை கடத்தல், விபத்துகள், கொலை, கொள்ளை என நாளுக்கு நாள் சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குற்றத்தை தடுக்க, அல்லது... மேலும் பார்க்க

Chat GPT: இனி வாட்ஸ்ஆப்பிலேயே பயன்படுத்தலாம்; Meta AI உடன் போட்டிப்போடும் Open AI?

ஓபன் ஏஐ நிறுவனம் சோதனை முயற்சியாக 1-800-ChatGPT என்ற சேவை எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நீங்கள் உங்கள் மெஸ்ஸேஜிங் ஆப் மற்றும் வாட்ஸ்ஆப்பில் இந்த எண்ணை சேவ் செய்து சேட் ஜிடிபியுடன் உரையாடலாம்... மேலும் பார்க்க