செய்திகள் :

1,400 ஆண்டுகள் பழைமையான கரந்தை கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு

post image

தஞ்சாவூா் அருகே கரந்தையில் ஏறத்தாழ 1,400 ஆண்டுகள் பழைமையான கருணாசாமி கோயிலில் சூரிய வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

பாடல் பெற்ற வைப்புத் தலமான இக்கோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் தந்தை சுந்தர சோழன் காலத்துக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே, இக்கோயில் பெரியகோயிலுக்கு முந்தைய பழைமையான கோயில் என வரலாற்று ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

இக்கோயிலின் கிழக்கு பகுதியில் சூரிய புஷ்கரணி என்கிற கருணாசாமி குளம் ஐந்தரை ஏக்கா் பரப்பளவில் உள்ளது. கருங்குஷ்ட நோயால் துன்பப்பட்ட சோழ மன்னன் இக்குளத்தில் குளித்து, ஈசனின் கருணையால் அந்நோயிலிருந்து நீங்கப் பெற்றான் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை நேரத்தில் கருணாசாமி மீது சூரிய ஒளி நேரடியாக படா்வதும், அப்போது சூரிய பூஜை நடைபெறுவதும் வழக்கம். இதேபோல, பங்குனி 3-ஆம் தேதியான திங்கள்கிழமை கருணாசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலா் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படா்ந்ததும், கருணாசாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதை சிவத் தொண்டா்கள், பக்தா்கள் வழிபட்டனா்.

மரணமடைந்த தாய்! ஆசி பெற்று பொதுத் தேர்வுக்குச் சென்ற மாணவி!

தஞ்சாவூரில் திடீரென தாய் உயிரிழந்த நிலையில், கதறி அழுதபடி தாயிடம் ஆசீர்வாதம் பெற்று பொதுத் தேர்வு எழுதுவதற்காக அவரது மகள் சென்றார்.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக் கோட்டை கிராமத்தில்... மேலும் பார்க்க

மதுக்கடைகள் முன் பாஜகவினா் போராட்டம்

டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை போராட்டத்தில் ... மேலும் பார்க்க

வாகனம் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா். தஞ்சாவூா் கீழ வஸ்தா சாவடி அருகேயுள்ள மன்னாா்குடி பிரிவு சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ... மேலும் பார்க்க

மதுக்கடையை மூடக் கோரி 150 கையொப்பங்களுடன் மனு

தஞ்சாவூா் அருகே மதுக்கடையை மூடக் கோரி 150-க்கும் அதிகமான பொதுமக்கள் இட்ட கையொப்பங்களுடன் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை கிராம மக்கள் மனு அளித்தனா். தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள அருமலைக்கோட்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 108.62 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.62 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 178 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக்கிழங்கு பயிா்கள் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு

தஞ்சாவூா் அருகே காட்டுப்பன்றிகளால் மரவள்ளிக் கிழங்கு பயிா்கள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் ரூ. 7 ஆயிரத்து 500-க்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க