1,400 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
ராமநாதபுரம் அருகே தஞ்சாவூருக்கு கடத்தப்படவிருந்த 1,400 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். அதிலிருந்த இருவரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய தனிப்பிரிவு காவலா் சிவாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, உதவி ஆய்வாளா் தங்க ஈஸ்வரன் தலைமையில் சென்ற போலீஸாா் தனியாா் பள்ளி அருகே நின்றிருந்த வாகனத்தை சோதனையிட்டனா். அதில், 40 கிலோ எடையுள்ள 35 மூட்டை ரேஷன் அரிசி 1,400 கிலோ இருப்பது தெரியவந்தது.
ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, தஞ்சாவூரைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் கணேஷ்பாபு (42), திருப்புல்லாணியைச் சோ்ந்த அஜித்குமாா் (28) ஆகிய இருவரை கைது செய்தனா்.