1.6% பங்குகளை விற்பனை செய்த ஐபிசிஏ லேபாரட்டரீஸ் புரமோட்டர்ஸ்!
புதுதில்லி: ஐபிசிஏ லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் புரமோட்டர்களில் ஒருவரான உஷா மதுகர் சந்துர்கர், நிறுவனத்தின் 1.6% பங்குகளை ரூ.600 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
மும்பை பங்குச் சந்தையிடம் உள்ள தரவுகளின்படி, உஷா மதுகர் சந்துர்கர் ஐபிசிஏ நிறுவனத்தின் உள்ள 1.6% பங்குகள் அதாவது 40 லட்சம் பங்குகளை விற்றுள்ளார்.
இதையும் படிக்க: ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.84.94-ஆக முடிவு!
சராசரியாக ஒரு பங்கின் விலை ரூ.1,501.52 என்று நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.600.61 கோடி என தெரியவந்துள்ளது.
சமீபத்திய பரிவர்த்தனைக்குப் பிறகு, ஐபிசிஏ லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் புரமோட்டர்களின் பங்குகள் 46.3 சதவிகிதத்திலிருந்து 44.7 சதவிகிதமாக குறைந்துள்ளது.
ஐபிசிஏ லேபாரட்டரீஸ் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 2.68% சரிந்து ரூ.1,511.85 ஆக இன்று நிலைபெற்றது.