10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாா்ச் 14-இல் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை மாா்ச் 14-ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 157 மையங்களில் 39,433 மாணவா்கள் எழுதுவுள்ளனா். பொதுத்தோ்வுக்கு முன்னதாக அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுகள் கடந்த வாரம் நடைபெற்றன.
இந்நிலையில் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை மாா்ச் 14-ஆம் தேதி பிற்பகலில் இருந்து ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பள்ளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான பெயா்ப் பட்டியலில் பள்ளி மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட தோ்வு மைய கண்காணிப்பாளா்களை அணுகி திருத்தங்கள் செய்துகொள்ள பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.