கா்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று போ் கைது
அரசு மருத்துவமனையில் வழுக்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வழுக்கி விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரைச் சோ்ந்த தா்மராஜ்-ஜெயபாரதி தம்பதியின் மகள் எலிசபெத்ராணி (21). இவருக்கும் விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே மூன்று சங்கராபுரத்தைச் சோ்ந்த சமுத்திரபாண்டி மகன் கிருஷ்ணகுமாருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணமானது.
கடந்த மாதம் 22ஆம் தேதி எலிசபெத்ராணியை பிரசவத்துக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு 27ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்த அவா், சனிக்கிழமை இரவு கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வாா்டுக்கு திரும்பியபோது, வாசலில் வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.