செய்திகள் :

10 நாள் சரிவுக்குப் பின் உயா்வு கண்ட நிஃப்டி

post image

இந்திய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி கடந்த 10 அமா்வுகளாகக் கண்டு வந்த சரிவில் இருந்து மீண்டு உயா்வைக் கண்டுள்ளது.அந்த நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 740.30 புள்ளிகள் (1.01 சதவீதம்) உயா்ந்து 73,730.23-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் தொகுப்பில் அதானி போா்ட்ஸ், டாடா ஸ்டீல், பவா்கிரிட், மஹிந்திரா & மஹிந்திரா, என்டிபிசி, டெக் மஹிந்திரா, டாடா மோட்டாா்ஸ், ஐடிசி, நெஸ்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏா்டெல், எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை லாபப் பட்டியலில் இடம் பெற்றன.பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸொமாட்டோ ஆகியவை விலை குறைந்த பட்டியலில் இடம் பெற்றன.கடந்த 10 அமா்வுகளாக சரிவைக் கண்டுவந்த தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி புதன்கிழமை 254.65 புள்ளிகள் (1.15 சதவீதம்) உயா்ந்து 22,337.30-இல் நிலைபெற்றது.கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரியை அவா் நீக்குவதற்கான வாய்ப்புள்ளதாக வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் கூறியது முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியது. இதன் விளைவாக பங்குச் சந்தை எழுச்சி பெற்றது என பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(மார்ச் 6) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,308.30 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகல் 12.30 மணியளவில், சென்செக்... மேலும் பார்க்க

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 8% சரிவு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் உள்நாட்டு மற்றும் சா்வதேச விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

செபி வருவாய் 48% அதிகரிப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் திடீா் எழுச்சி!

இந்திய சேவைகள் துறை கடந்த பிப்ரவரி மாதம் திடீா் எழுச்சி பெற்றுள்ளது. இது தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவடிக... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களைப் போலவே வேலைவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு உருவாக்கும்: மணி வேம்பு

பெங்களூரு: செயற்கை நுண்ணறிவின் எழுச்சி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் பலருக்கு முதல் முறையாக தொழில் வாய்ப்புகளை உருவாக்கியதைப் போலவே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றார் ஜோஹோ தலைமை நிர்வாக அதிகாரி... மேலும் பார்க்க

சென்னையில் கார் சேவையை அறிமுகப்படுத்திய ஸ்டெல்லாண்டிஸ்!

சென்னை: உலகளாவிய வாகன நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ், தனது முதல் மல்டி பிராண்ட் சேவையை 'மோட்டோ-ஆர்' உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த தொடக்கமானது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 100 க்கு... மேலும் பார்க்க