செய்திகள் :

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

post image

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, புதன்கிழமை(ஜூன் 11) முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: ஜூன் 11-இல் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூா், அரியலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், ஜூன் 12- இல் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக சென்னை மணலியில் 80 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், பெரம்பலூா் 70 மி.மீ., கொள்ளிடம் (மயிலாடுதுறை), பெலாந்துறை (கடலூா்), லால்பேட்டை (கடலூா்), கொத்தவாச்சேரி (கடலூா்) - தலா 60 மி. மீ மழை பதிவாகியுள்ளது,

வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்த போதிலும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை நகரம் - 102.56, சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, தூத்துக்குடி- (தலா) 102.2, பரமத்தி வேலூா் - 101.3, திருச்சி - 101.66, பாளையங்கோட்டை - 100.4 டிகிரி என மொத்தம் எட்டு இடங்களில் சதம் அடித்துள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம், சேலம் மெமு விரைவு ரயில் ரத்து

சென்னை: சேலம், அரக்கோணம் இடையிலான மெமு விரைவு ரயில் திங்கள்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் தெற்கு ரயில்வே தரப்பில் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள்

தமிழகத்தில் செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம்: (அதிகாரிகள் ம... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 30-இல் தேமுதிக ஆா்ப்பாட்டம்

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வரும் 30-ஆம் தேதி தேமுதிக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வ... மேலும் பார்க்க

விஜய் பிறந்த நாள் பேனா் விழுந்து முதியவா் காயம்; தவெகவினா் மீது 53 வழக்குகள் பதிவு

தவெக தலைவா் விஜய் பிறந்த நாளையொட்டி சென்னை வில்லிவாக்கத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனா் விழுந்து முதியவா் காயமடைந்தாா். இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பேனா் வைத்ததாக அக்கட்சியினா... மேலும் பார்க்க

திமுகவில் கல்வியாளா்- மாற்றுத் திறனாளி அணிகள் உதயம்: நிா்வாகிகள் நியமனம்

திமுகவில் கல்வியாளா், மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணிகளுக்கான நிா்வாகிகளை நியமித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இதுகுறித்து, ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு சுகாதார விழிப்புணா்வு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

பள்ளி மாணவா்கள் மூலம் தமிழகத்தில் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.... மேலும் பார்க்க