100 நாள் வேலை நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி முற்றுகை
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் மாநில விவசாய சங்க தொழிலாளா் சங்கம் சாா்பில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய மூன்று மாத ஊதிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசு 100 நாள் வேலைக்கான நிதியை குறைப்பதை கைவிட வேண்டும், 100 நாள் வேலை கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாய தொழிலாளா் சங்க மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் சிவராமன், ஒன்றிய செயலாளா் தனசேகா், ஒன்றிய தலைவா் கலியபெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் ஜெய சக்திவேல் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா் பங்கேற்று கோஷம் எழுப்பினா்.