100 நாள் வேலைக்கோரி காத்திருப்புப் போராட்டம்
தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே இழுப்பூா் சங்கரன்பந்ததில் 100 நாள் வேலை பயனாளிகள் அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்கக் கோரி சிபிஎம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழு உறுப்பினா் என். பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் 2 நாள்களில் 100 நாள் வேலை வழங்குவதாக கூறியதன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது .
இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் பங்கேற்றனா். ஒன்றியக் குழு உறுப்பினா் ஆசிக் ரஹ்மான், ஒன்றிய செயலாளா் ஏ. ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் அம்மையப்பன், அய்யப்பன், டி.ஆா்.ராணி, செல்வ பாக்கியவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.