செய்திகள் :

12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

post image

சென்னை: கனமழை எச்சரிக்கை மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை(டிச.2) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்தது. அதையடுத்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டியது.

புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்களும், மரக்கிளைகளும் முறிந்து சாலைகளில் விழுந்துள்ளன. மழை நீர் தேங்கியுள்ளன.

இதையும் படிக்க : விழுப்புரம், புதுச்சேரியில் வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பல்வேறு இடங்களில் மழை தொடர்ந்து வருவதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:

பள்ளி, கல்லூரிகள்:

விழுப்புரம்

கடலூர்

திருவண்ணாமலை

கள்ளக்குறிச்சி

கிருஷ்ணகிரி

புதுச்சேரி

பள்ளிகளுக்கு மட்டும்:

வேலூர்

ராணிப்பேட்டை

திருப்பத்தூர்

தருமபுரி

சேலம்

செங்கல்பட்டு - திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு தாலுகாக்களுக்கு மட்டும்

கி.வீரமணி பிறந்தநாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 92-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் ... மேலும் பார்க்க

விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து!! உதவி எண்கள்!

சென்னையில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்ததை அடுத்து, ... மேலும் பார்க்க

ஹெச். ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை!!

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.பெரியார் சிலை உடைப்பது, அறநிலைத்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை அவதூறாக பேசி... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார்.வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இ... மேலும் பார்க்க

கடலூர் வெள்ளம்: விடியோ காலில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

கடலூர் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சருக்கு விடியோ கால் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்த நிலையில், விழுப்ப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை!! ஊத்தங்கரையில் 503 மி.மீ. பதிவு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் திங்கள்கிழமை காலை 8 மணிவரை ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.இதையும் ப... மேலும் பார்க்க