செய்திகள் :

14 ஆண்டுகளுக்குபிறகு மாதோஸ்ரீ இல்லத்தில் ராஜ் தாக்கரே... உத்தவ் தாக்கரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

post image

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு நேற்று பிறந்தநாள். இதனையடுத்து சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லமான மாதோஸ்ரீயில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்திருந்தனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி உத்தவ் தாக்கரே தனது பிறந்தநாளினை கொண்டாடினார். உத்தவ் தாக்கரேயின் பிறந்தநாளையொட்டி ராஜ் தாக்கரே மாதோஸ்ரீ இல்லத்திற்கு வந்தார். அவர் உத்தவ் தாக்கரேயிக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் சேர்ந்து பால்தாக்கரே புகைப்படத்திற்கு முன்பு நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

ஒன்றாக இருப்பதற்குத்தான் ஒன்றாக சேர்ந்துள்ளோம்!

இதில் பேசிய உத்தவ் தாக்கரே, ``நாங்கள் ஒன்றாக இருப்பதற்குத்தான் ஒன்றாக சேர்ந்துள்ளோம். நாங்கள் ஒன்றாக சேர்ந்து மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்''என்று தெரிவித்தார். ராஜ் தாக்கரேயுடன் அவரது கட்சி நிர்வாகிகள் பாலாநந்த்காவ்கர், நிதின் சர்தேசாய் ஆகியோரும் வந்திருந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயை எதிர்த்து நிதின் சர்தேசாய் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ் தாக்கரே கடைசியாக 2012-ம் ஆண்டு பால் தாக்கரே இறந்தபோது மாதோஸ்ரீ இல்லத்திற்கு வந்தார். அதன் பிறகு ஒருபோதும் ராஜ் தாக்கரே உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு வரவில்லை. ராஜ் தாக்கரே கடந்த 2005ம் ஆண்டு உத்தவ் தாக்கரேயுடனான அதிகாரப்போட்டி காரணமாக சிவசேனாவில் இருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் ஒரு போதும் சந்தித்துக்கொண்டதில்லை. தற்போது இந்தி திணிப்பு பிரச்னை வந்த போது உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

இதையடுத்து மாநில அரசு இந்தி திணிப்பை கைவிட்ட போது ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் ஒன்றாக கலந்து கொண்டனர். இதையடுத்து அடுத்து நடக்க இருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா(உத்தவ்)வும், ராஜ் தாக்கரேயின் நவநிர்மான் சேனாவும் கூட்டணி அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. இதுவரை கூட்டணி குறித்து பேசாத உத்தவ் தாக்கரே முதல் முறையாக ராஜ் தாக்கரேயுடன் இணைந்து போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Modi: "ட்ரம்ப் முன்னாடி 56 இன்ச் மார்பு 36-ஆக சுருங்கிடுது" - மோடியை மக்களவையில் விமர்சித்த TMC MP

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.அதைத்தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்த... மேலும் பார்க்க

"காவலர்கள் புகழடைய என்னை அசிங்கப்படுத்துகின்றனர்" - கண் கலங்கிய மன்சூர் அலி கான்; பின்னணி என்ன?

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்னையில் மன்சூர் அலி கான் மகன் மீது, 67 வயது நபரை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் மீது களங்கம் ஏற்படுத்தவே தனது மகன் மீது வழக்குப்பதிவ... மேலும் பார்க்க

Modi TN Visit: "திமுக, பாஜக-வின் அரசியல் ஆதாய நாடகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்" - தவெக விஜய்

தி.மு.க.. பா.ஜ.க.வின் அரசியல் ஆதாய நாடகத்தைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறியிருக்கிறார்அவர் வெயிட்டிருக்கும் அறிக்கையில், "கங்கை கொண்டான் கடாரம் வென்றான் என்று பெயர் பெற்ற,... மேலும் பார்க்க

Operation Sindoor: `தாக்குதலுக்கு யார் பொறுப்பு? யாரிடம் சரணடைந்தீர்கள்?’ - காங்கிரஸ் காட்டம்

நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரும் முக்கிய விவகாரங்களில் ஒன்று ஆபரேஷன் சிந்தூர். ஜூலை 21-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்க, பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்த... மேலும் பார்க்க