MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சிறுவன்..! சுந்தர் பிச்சை கூறியதென்ன?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 வயதில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி குறித்து சுந்தர் பிச்சை புகழ்ந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னௌ அணிகள் நேற்றிரவு ஜெய்பூரில் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178/5 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கினார். தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த இவர் 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார்.
மார்க்ரம் வீசிய பந்தில் ரிஷப் பந்திடம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்த சூர்யவன்ஷி அழுதுகொண்டே வெளியேறினார்.
பலரும் இந்த இளம் வீரருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவரும் நிலையில் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை தனது எக்ஸ் தளத்தில், “8-ஆவது படிக்கும் சிறுவனின் ஐபிஎல் விளையாட்டை பார்ப்பதற்காக எழுந்தேன்!!! என்ன ஒரு அறிமுகம்!” எனக் கூறியுள்ளார்.
சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Woke up to watch an 8th grader play in the IPL!!!! What a debut! https://t.co/KMR7TfnVmL
— Sundar Pichai (@sundarpichai) April 19, 2025